Connect with us
Kamal, Rajni

Cinema History

ரஜினி படத்திற்கு கமல் செய்த உதவி… மறக்க முடியாமல் இயக்குனர் சொன்ன தகவல்

ரஜினியும், கமலும் திரை உலக வாழ்வில் இருதுருவங்களாக இருந்த போதும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று பலருக்கும் தெரியும். ஒருவருக்கொருவர் ஆலோசனை சொல்வதும் உண்டு.

கமல், ரஜினி இருவரும் ஆரம்ப நாட்களில் இணைந்தே நடித்து வந்தனர். அதன்பிறகு தயாரிப்பாளர்கள் சம்பாதிக்க நாம் ஏன் இணைந்து நடிக்க வேண்டும். நாம் தனித்தனியாக நடித்தால் தான் முன்னேற முடியும் என்ற வெற்றிப்பாதையை ரஜினிக்குக் காண்பித்தவரே கமல் தான்.

இதையும் படிங்க… இது எம்.ஜி.ஆர் நடிக்க வேண்டிய கதை!.. சிவாஜி சொல்லியும் கேட்காத இயக்குனர்!.. படமோ பிளாப்!..

அந்தவகையில் ரஜினியின் முள்ளும் மலரும் படத்திற்கு கமல் பேருதவி செய்துள்ளார். இதுபற்றி படத்தின் இயக்குனர் மகேந்திரன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

முள்ளும் மலரும் படத்தை இயக்கியவர் மகேந்திரன். ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ரஜினியின் நடிப்பு அபாரமாக இருக்கும். இந்தப் படத்திற்கு கமல் செய்த உதவி பற்றி இயக்குனர் மகேந்திரன் இப்படி தெரிவித்துள்ளார்.

நான் இயக்கிய முதல் படம் முள்ளும் மலரும். இந்தப் படத்திற்காக நான் ஒளிப்பதிவாளரைத் தேடிக் கொண்டு இருந்தேன். கமல் தான் எனக்கு பாலுமகேந்திராவை அறிமுகம் செய்தார். அதன்பிறகு தான் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்தது.

இந்தப் படத்தின் டபுள் பாசிடிவைத் தயாரிப்பாளர் பார்த்தார். அவருக்கு அதிருப்தி. வசனம் மட்டும் சில இடங்களில் இருக்கிறது. பல இடங்களில் மவுனம் தான் வருகிறது என்று அதிருப்தியாக இருந்தார்.

கடைசியில் செந்தாழம்பூவில் பாடலையும், அதற்கு முன் வரும் லீடு காட்சியையும் படமாக்காமல் படத்தை ரிலீஸ் செய்யுங்கள் என்றார். ஆனால் படத்தின் உயிர்நாதமே அதுதான் என்று மகேந்திரன் எவ்வளவோ சொல்லியும் முடியாது என்று மறுத்துவிட்டுப் போய்விட்டார்.

இதையும் படிங்க… எம்ஜிஆரை சண்டையில் கவிழ்த்துப் போட்ட கலைவாணர்…! பழிவாங்க துடித்த புரட்சித்தலைவர்..!

இதுபற்றி கமலிடம் சொல்லி வருத்தப்பட்டாராம். உடனே கமலும் தயாரிப்பாளரிடம் சென்று பேசிப்பார்த்துள்ளார். எந்தவித பயனும் இல்லை. உடனே அந்தப் பாடல் மற்றும் லீடு காட்சியைப் படமாக்க கமல் தன் சொந்தப் பணத்தைக் கொடுத்துள்ளார்.

அதன்பிறகு தான் சத்யா ஸ்டூடியோவிற்குச் சென்று லீடு காட்சியைப் படமாக்கினாராம் இயக்குனர் மகேந்திரன். இன்று முள்ளும் மலரும் படத்தைப் பற்றியும், என்னைப் பற்றியும் பலரும் பேசுகிறார்கள் என்றால் அதற்குக் காரணமே கமல் தான் என்கிறார் இயக்குனர் மகேந்திரன்.

google news
Continue Reading

More in Cinema History

To Top