குவிந்த பட வாய்ப்புகள்... கமலை அடுத்து இயக்க போவது யார் தெரியுமா?

by Akhilan |
குவிந்த பட வாய்ப்புகள்... கமலை அடுத்து இயக்க போவது யார் தெரியுமா?
X

தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் தான் பல ரசிகர்கள் இவருக்கு இன்றும் இருக்கிறார்கள். தொடர்ந்து, கமலுக்கு பல வாய்ப்புகள் குவிந்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவை இந்த வருடம் காப்பாற்றிய ஒரே நல்வரவு விக்ரம் படம் தான். பல முன்னணி நடிகர்களின் படங்களான பீஸ்ட், அண்ணாத்த, வலிமை இந்த வருடம் பல படங்கள் வந்தது. ஆனால், எல்லா படங்களுமே பெரிய நடிகர்களின் படம் என்ற வசூலை தவிர பெரிய ரீச்சை கொடுக்கவில்லை. தமிழ் சினிமாவிற்கு என்ன சோகம் என பலரும் குமுறிக்கொண்டு இருக்க நாயகன் மீண்டும் வரான் என கமல் எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் விக்ரம். முதல் விக்ரம் படத்தினை முன்கதையாக கொண்டு, கைதி படத்தினை சைடில் பிடித்துக்கொண்டு முழு படத்தினையும் எடுத்திருந்தார். அவெஞ்சர்ஸ் என்னடா வரிசையா படம் எடுக்கிறது. தமிழ் சினிமாவிற்கு ஒருத்தர் இருக்கார் என்பதும் பட வெற்றிக்கு ஒரு காரணமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் கமலை வைத்து படத்தினை இயக்க பலர் போட்டி போட்டுக்கொண்டு அவரிடம் கதையை கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: வெந்து தணிந்தது காடு படத்தில் இத கமல் பண்ண வேண்டியது…! அந்த ஒரு காரணத்தால் மிஸ் பண்ண கௌதம்…

அந்த வகையில், கமல் தற்போது இந்தியன்2ல் நடித்து வருகிறார். தொடர்ந்து, மகேஷ் நாராயணன் படம் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. அடுத்து, பா. ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படமெடுக்கவும் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் பாதியில் நின்ற சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்புகளும் துவங்க இருக்கிறது. மேலும், விக்ரமின் அடுத்த பாகமும் லோகேஷ் இயக்கத்தில் தயாராகி வருகிறது. அதிலும் கமல் நடிக்க இருக்கிறார். இதில் ஐசரி கணேஷ் கமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அப்பா இப்பவே கண்ணக் கட்டுதே!

Next Story