பழம்பெரும் நடிகர் என்ற நிலைக்கு வந்துள்ள உலகநாயகன் கமல் இன்று வரை உத்வேகம் குறையாமல் படங்களில் நடித்தும், தயாரித்தும் வருகிறார். தற்போது தொடர்ந்து அவரது படங்கள் வர உள்ளன. இது ரசிகர்களுக்கு விருந்து தான்.
35 ஆண்டுகளுக்குப் பிறகு 6 மாத இடைவெளியில் 3 படங்கள் வெளியாக உள்ளது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 AD படத்தில் கமல் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இது ஜூன் 27ல் ரிலீஸாகிறது. தொடர்ந்து இதே மாதத்தில் இந்தியன் 2 படத்தையும் வெளியிட திட்டமிட்டார்கள். ஆனால் இப்போது அது ஜூலைக்குச் செல்கிறது.
அடுத்ததாக மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவாகி வரும் படம் தக் லைஃப். இந்தப் படமும் இந்த ஆண்டே வெளிவருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆறு மாதத்திற்குள் கமலின் 3 படங்கள் வெளிவருவது மிகப்பெரிய விஷயம்.
இது 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது திரையுலக வாழ்வில் நடக்காத ஒரு நிகழ்வு. 1989ல் 3 படங்கள் 6 மாதங்களுக்குள் வந்தன. மலையாளத்தில் சங்கயன், தமிழில் வெற்றி விழா, தெலுங்கில் இந்துருடு, சந்துருடு என்ற படங்கள் 89ன் பிற்பகுதியில் தான் வெளிவந்தன. இது கமலுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது.
அதே ஒரு அற்புதமான அனுபவம் தற்போது 2024ல் வர உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர். பாக்ஸ் ஆபீஸிலும் 3 படங்களும் பட்டையைக் கிளப்பும் என்பது உறுதி. கமல் கல்கி 2898 AD மற்றும் இந்தியன் 2 படத்தை முமுடித்து விட்டார். அதே போல தக் லைஃப் படத்தின் சூட்டிங் தற்போது டெல்லியில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை குறிப்பிட்ட தேதிகளுக்குள் படம் ரிலீஸாகி இந்த அதிசயம் நடந்தால் அது தமிழ் சினிமா உலகிற்கே ஆரோக்கியமான விஷயம் தான். சமீப காலமாக பழம்பெரும் நடிகர்களான ரஜினி, கமல் படங்கள் என்றால் ஆண்டுக்கு ஒரு முறை தான் வருகிறது. இன்னும் சொல்லப்போனால் அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத் படங்களே ஆண்டுக்கு ஒரு முறை தான் வருகிறது.
சில நேரங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. அந்த வகையில் ஒரே ஆண்டில் அதுவும் 6 மாதத்திற்குள் 3 படங்கள் வருவது என்பது இந்தத் தலைமுறை காணாத ஒரு அதிசயம் தான். இது 80ஸ் கிட்ஸ்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். தற்போது 2கே கிட்ஸ்களும் அனுபவிக்கும் என்பது நிச்சயம்.
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…