கமல் படத்திற்கு வந்த சோதனை!.. எம்ஜிஆர் கொடுத்த சர்ப்ரைஸ்!.. ஆடிப்போன படக்குழு..

mgr
தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கைக்கு உரிய நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமலஹாசன். உலக நாயகனாக ஆண்டவராக மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் கமல். சினிமாவையும் தாண்டி அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். புதுப்புது தொழில்நுட்பத்திற்கு ஏற்ப சினிமாவில் புதுப்புது தகவல் தொழில் நுட்பங்களை புகுத்த நினைப்பவர்.

mgr1
சினிமாவின் ஒரு என்சைக்ளோபீடியாவாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார் கமல். சிவாஜியை அடுத்து நடிப்பிற்கு ஒரு இலக்கணமாக திகழ்ந்து வருகிறார். நடிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்று பல பேட்டிகளில் கூறி இருக்கும் கமல் வளரும் இளம் தலைமுறையினருக்கு ஒரு உதாரணமாகவே இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை ரேவதி கமலுடன் சேர்ந்து நடித்த தன்னுடைய அனுபவத்தையும் அதனால் ஏற்பட்ட ஒரு சுவாரசியமான சம்பவத்தை பற்றியும் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கமலுடன் ரேவதி ஒரு கைதியின் டைரி, புன்னகை மன்னன் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர்.

mgr2
அந்த இரு படங்களுமே ரேவதிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படங்களாகும். 1985 ஆம் ஆண்டு வெளியான கைதியின் டைரி படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார். அந்தப் படத்தில் ஒரு மாடர்ன் கேர்ள் ஆக ரேவதி நடித்திருப்பார். அதுவரை ஒரு கிராமத்து பெண்ணாகவே நடித்த ரேவதிக்கு இந்த கைதியின் டைரி படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தை தந்ததாக அந்த பேட்டியில் கூறினார்.
அந்தப் படத்தின் ஒரு காட்சியை படமாக்கும் போது அதில் ஒரு பிரச்சனை வந்ததாகவும் ரேவதி கூறினார். அதாவது அதுதான் அந்த படத்தின் கடைசி காட்சியாம். அது தமிழகத்தில் எடுக்க வேண்டி இருந்ததாம். அப்போது முதலமைச்சராக இருந்தவர் எம்ஜிஆர் .அதனால் எம்ஜிஆர் இருக்கும்போது அங்கு படப்பிடிப்பை நடத்த விட மாட்டோம் என கூறி இருந்தார்களாம்.

mgr3
உடனே பாரதிராஜா எம்.ஜி.ஆருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இன்று ஒரு நாள் மட்டும் படப்பிடிப்பை நடத்திக் கொள்கிறோம் என்று வேண்டுகோள் விடுத்தாராம். உடனே எம்ஜிஆர் அதை ஏற்று "உடனே வாருங்கள் எல்லோருக்கும் இங்குதான் சாப்பாடு "என்றும் சொல்லி இருந்தாராம்.
அந்தப் படப் படிப்பு நடக்கும் போது கூடவே எம்ஜிஆர் இருந்தாராம்.அவர் சொன்னதைப் போல அந்த காட்சி படமாக்கப்பட்டதும் அங்கு இருந்த அனைத்து ஊழியர்களுக்கும் எம்ஜிஆர் சாப்பாடு பரிமாறினாராம் .இதை அந்த பேட்டியில் ரேவதி மிகவும் மகிழ்ச்சியாக கூறினார்.