நடிகை சிலுக்கின் இடுப்பை கிள்ளிய நடன இயக்குனர்...என்ன நடந்துச்சு தெரியுமா?
ஐட்டம் நடனத்தில் தனது ட்ரேட்மார்க் அடையாளத்தினை வைத்து சென்ற சில்கிற்கு முதலில் நடிக்க மட்டுமல்ல நடனம் கூட ஆட தெரியாது என்ற சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
80களில் ரஜினி, கமல், விஜயகாந்த் கார்த்தி, சத்யராஜ் போன்ற நடிகர்களின் படங்களில் நடிகை சில்க் ஸ்மிதா தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்தார். விஜயலட்சுமி என்ற புனைப்பெயர் கொண்ட சினிமாவிற்காக சில்க் ஸ்மிதா என்று மாறினார். அந்த கால சினிமா ஒட்டுமொத்தத்தையும் சில்க் ஸ்மிதாவே ஆக்கிரமித்து வைத்திருந்தார்.
முதலில் சில்க்கிற்கு நடனம் ஆடவே தெரியவில்லையாம். கமல் கூட நடன இயக்குனர் புலியூர் சரோஜாவிடம் போச்சு மாட்டிக்கிட்டீங்க என கமெண்ட் அடித்து செல்வாராம். ஆனால் சில்கினை அனைவரும் அசரும் வகையில் ஆட வைத்து விட வேண்டும் என்பதில் புலியூர் சரோஜா வைராக்கியமாகவே இருந்தாராம்.
தொடர்ச்சியாக நேத்து ராத்திரி அம்மா என்ற பாடலில் சில்க் செமையாக ஆடி இருப்பார். ஆனால் முதலில் அவருக்கு அந்த நடனத்தில் பாதிக்கூட வரவே இல்லையாம். ஒரு காட்சியில் அவர் வெட்கப்படணும் எனக் கூற சில்க்கால் அந்த காட்சியினை செய்ய முடியவில்லை.
இதனால் கேமராவின் அடியில் அமர்ந்து கொண்ட சரோஜா சரியாக அந்த சீன் வரும்போது அவர் இடுப்பை கிள்ளி விட்டாராம். இதை தொடர்ந்தே அந்த டேக் ஓகேயான நிலையில், பாடலும் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.