உதவி கேட்டுப்போன விகே ராமசாமி!.. தலை தெறிக்க ஓட விட்ட காமராஜர்!...
எளிமை, நேர்மை, கடமை என வாழ்ந்தவர் காமராஜர். தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். இறந்த போது அவரிடம் சொற்பமான பணமே இருந்தது. அந்த அளவுக்கு நேர்மையாக வாழ்ந்து விட்டு போனார். பல வருடங்களாகவே தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி துவங்கும் பலரும் காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றுதான் சொல்லுவார்கள். காமராஜரிடம் ஒரு பழக்கம் உண்டு. இவரிடம் யார் வந்து எதுபற்றி பரிந்துரை செய்தாலும் கேட்க மாட்டார். தனக்காகவும் எதையும் செய்து கொள்ளமாட்டார். அந்த அளவுக்கு நேர்மையாக இருந்தவர்.
நடிகர் விகே ராமசாமி காமராஜருக்கு நல்ல நண்பராக இருந்தார். இருவருக்கும் சிறு வயது முதலே பழக்கம் இருந்தது. ஏனெனில் இருவருமே விருதுநகரை சேர்ந்தவர்கள்தான். தனது நண்பர் முதலமைச்சராக இருந்தாலும் அவரிடம் எந்த உதவியும் சென்று கேட்க மாட்டார் வி.கே.ராமசாமி.
ஒருமுறை விருதுநகரில் ஒரு அரசு பள்ளிக்கூடத்தின் கூரை பெயர்ந்துவிட்டது. எனவே, அந்த ஊரிலிருந்து 5 பேர் சென்னை வந்து வி.கே. ராமசாமியை பார்த்து ‘காமராஜர் உங்கள் நண்பர்தனே, அவரை நேரில் பார்த்து இதை சொல்லி பள்ளியின் மேற்கூரையை சரி செய்ய நடவடிக்கை எடுங்கள்’ என கேட்டுள்ளனர்.
சரி நல்ல காரியம்தானே என நினைத்த விகே ராமசாமி தலைமை அலுவலகம் சென்று காமராஜரை பார்த்து இதுபற்றி பேசியுள்ளார். இதைகேட்டு கோபமடைந்த காமராஜர் ‘பள்ளி மேற்கூரை இடிந்தது போனதற்கு 5 பேர் இங்க வந்திருக்கானா?.. இப்ப அவனுங்க எங்க தங்கியிருக்கானுங்க?’ என கேட்க ‘லாட்ஜில் தங்கியிருக்கிறார்கள்’ என விகே ராமசாமி சொல்லியிருக்கிறார்.
காமராஜரோ ‘5 பேர் பேருந்துல வந்து போற செலவு, லாட்ஜில தங்குற செலவு இதெல்லாம் வச்சு அந்த பள்ளிக்கூரைய கட்டி கொடுக்கலாமே. அவனுங்க என்ன சென்னைக்கு பிக்னிக் வந்தானுங்களா?’ என சத்தம் போட விகே ராமசாமி அங்கிருந்து தலை தெறிக்க ஓடியுள்ளார். அதன்பின் அவர் யோசித்து பார்த்த போது காமராஜர் சொன்னது சரிதான் என அவருக்கு பட்டதாம். நடிகன் நடிகன்தான்.. தலைவன் தலைவன்தான் என நினைத்துக்கொண்டாராம்.
அடுத்தநாளே அந்த பள்ளியின் மேற்கூரை காமராஜரின் நடவடிக்கையால் சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ் உச்சரிப்பு சரியாக பேசக்கூடிய நடிகை!.. கலைஞரே பாராட்டிய அந்த நடிகை யார் தெரியுமா?..