துவண்டுபோன நேரத்தில் அம்மா சொன்ன அந்த வார்த்தை!.. கமல் இறங்கி அடித்தது இப்படித்தானாம்!..
எந்த துறையானாலும் சரி!.. அதில் சரிவு ஏற்பட்டு துவண்டு விழும்போது தூக்கிவிட யாராவது இருக்க வேண்டும். இல்லையேல், நமக்கு நாமே நம்பிக்கை கொடுத்து தொடர்ந்து பயணிக்க வேண்டும். இல்லையேல் நாம் மீண்டும் எழவே முடியாது.
திரைத்துறையில் அவ்வளவு சுலபமாக ஒருவர் மேலே வந்துவிட முடியாது. பல எதிர்ப்புகள், காழ்ப்புணர்ச்சிகள், பொறாமைகளை தாண்டி ஒருவர் மேலே வரும் துறை அது. நிறைய அவமானங்களை கடந்து வர வேண்டும், கிண்டல், கேலிகளை தாக்குபிடிக்க வேண்டும். பொறுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி ஒரு நாள் கிடைக்கும்.
ரசிகர்களால் உலக நாயகன் என அழைக்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். 5 வயதில் நடிக்க துவங்கி இப்போது ஆலமரமாக வளர்ந்து நிற்கிறார். சின்ன சின்ன வேடங்கள், நடன இயக்குனரிடம் உதவியாளர், நடிகர், குணச்சித்திர நடிகர், கதாசிரியர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என அவர் கடந்து வந்த பாதை இப்போதுள்ள எந்த நடிகருக்கும் கிடையாது.
ஆனால், துவக்கத்தில் வாய்ப்புகள் இல்லாமல் எதை தேர்ந்தெடுப்பது என புரியாமல் அவர் குழம்பி தவித்த காலங்கள் உண்டு. இதுபற்றி ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய கமல் ‘ஒருகட்டத்தில் என் வாழ்க்கையில் எந்த வெளிச்சமும் இல்லை. அப்போது என் அம்மாவிடம் ‘நான் தப்பு செய்துவிட்டேனோ.. எனக்கு பயமாக இருக்கிறது. நீ சொன்னது போலவே நான் விளங்காமல் போய்விடுவேனா. நீ சொன்னது பலித்துவிடுமோ’ என கேட்டேன்.
அதற்கு என் அம்மா ‘நீ எந்த வேலையை வேண்டுமானாலும் செய். கழிப்பறையை கூட சுத்தம் செய். ஆனால், உலகத்திலேயே என் மகன்தான் சிறப்பாக கழிப்பறையை சுத்தம் செய்பவனாக இருக்க வேண்டும்’ என சொன்னார். அதைத்தான் எனக்கு உந்துதலாக எடுத்துக்கொண்டேன்’ என கமல் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: கமல்ஹாசன் படத்தை தவறாக எடைப்போட்ட ஆர்.ஜே.பாலாஜி… கடைசில இப்படி ஆகிடுச்சே!