தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி கமலை அடுத்து, விஜய் அஜித்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் பிரசாந்த். காதல் கதை, ஆக்சன் கதை என மாறி மாறி ஹிட் கொடுத்து பாலு மகேந்திரா, ஷங்கர், மணிரத்னம் என பிரமாண்ட இயக்குநர்களோடு பயணித்து வந்தார்.

அதன் பிறகு ட்ரெண்டை சரியாக கணிக்க தவறியதால் சினிமா மார்க்கெட்டில் இருந்து காணாமல் போனார். அதன் பிறகு வின்னர், ஆயுதம் போன்ற ஹிட் படங்களை கொடுத்தாலும் அடுத்தடுத்து மம்பட்டியான் போன்ற படங்களை கொடுத்து ரசிகர்களை கதற வைத்துவிட்டார்.
தற்போது தனது தந்தை இயக்குனர் நடிகர் தியாகராஜன் இயக்கத்தில் அந்தக்கண் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் பாலிவுட்டில் ஹிட்டான அந்தாதுன் படத்தின் ரிமேக் ஆகும்.

இதையும் படியுங்களேன் – பழைய பகையெல்லாம் மறந்து மீண்டும் அஜித்துடன் நடிக்கும் ‘அந்த’ பிரபலம்.!?
இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக அண்மையில், தியாகராஜனும், பிரசாத்தும் ஒரு பேட்டியில் கலந்துகொண்டனர். அதில், பிரசாந்த் பேசும் போது, எனது தந்தை எனக்காக வெளியூரில் இருந்து உடைகள் பிரத்யேகமாக வாங்கி வருவார். அதனை போட்டு படத்தில் நடிப்பேன். அடுத்த வருடம் அது ட்ரெண்ட் ஆகிவிடும் என கூறினார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ் சினிமாவில் உடையில் இளைஞர்கள் மத்தியில் அதிகம் ட்ரெண்டிங் உடைகளை களமிறக்கியத்தில் கமலுக்கு அடுத்து பிரசாந்த் தான் என கூறியிருந்தார்.
தந்தை மகனை புகழ்வதும், மகன் தந்தையை புகழ்வதுமாய் இருக்கிறது இந்த பேட்டி என ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
