சிவாஜியின் கெரியரில் முக்கியமான பாடல்.. கதையின் கருவை ஒரே வரியில் விவரித்த கண்ணதாசன்!..
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக என்றென்றும் காலங்காலமாக நிலைத்து நிற்கும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் மறைந்தாலும் அவரின் புகழ் என்றென்றும் மறையாது நிலைத்து நிற்கும். சினிமாவிற்காக அவர் விட்டுச் சென்ற பாடங்கள் ஏழேழு தலைமுறைகளுக்கும் உதவியாக இருக்கும்.
அந்த அளவுக்கு நடிப்பில் அசரனாக இருந்தவர் தான் சிவாஜி கணேசன். இன்றைக்கும் அவரை பற்றி பேச்சுகள், அவரை பற்றிய நினைவுகள் என ஒவ்வொரு மனிதருக்குக்குள்ளும் அசை பாடிக் கொண்டே இருக்கின்றன. மேலும் அவரின் சினிமா பயணத்தில் படங்கள் எப்படி பேசு பொருளாக அமைந்ததோ அதே அளவுக்கு பாடல்களும் வெற்றிப் படிக்கட்டுகளாக அமைந்தன.
அந்த வகையில் அவரின் கெரியரிலேயே மிகவும் முக்கியமான பாடல் என்றால் புதிய பறவை படத்தில் அமைந்த ‘உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும்’ என்ற பாடல். இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்திருந்தார். எந்தப் படத்திலயும் இல்லாது சிவாஜி இந்த படத்தில் மிகவும் ஸ்டைலிஷாகவும் மாடர்னாகவும் தோன்றியிருப்பார்.
இதையும் படிங்க :என்னது… இது எல்லாமே ஒரே ஆளா?? சிவாஜி படத்தை பார்த்து ஸ்தம்பித்துப்போன வெளிநாட்டினர்…
வெளிநாட்டில் ஒரு கொலையை செய்து விட்டு தப்பித்து வந்த சிவாஜியை அவர் வாயாலேயே உண்மையை சொல்ல வைக்க வேண்டும் என்று போலிஸ்காரர்களால் நடத்தப்படும் நாடகம் பற்றிய கதை தான் புதியபறவை. சிஐடியாக சரோஜா தேவி நடிக்க அவர் வாயிலிருந்து உண்மையை வரவழைக்க சிவாஜிக்கு காதலியாக நடிப்பார்.
அது தெரியாமல் சிவாஜியும் சரோஜா தேவியை காதலிக்க எனக்காக ஒரு பாடல் பாடேன் என்று ஒரு க்ளப்பில் சிவாஜி சரோஜா தேவியிடம் கேட்பார். அப்பொழுது எழுந்த பாடல் தான் உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும் என்று. இந்த பாடல் உணர்த்தும் கருத்து தான் இந்த படத்தின் ஒன் லைன் கதை.
உண்மையை தெரிந்து கொள்ளத்தான் சரோஜா தேவியே வந்திருப்பார். அதை அழகாக இந்த ஒரு வரி மூலம் உணர்த்தியிருப்பார் கண்ணதாசன். இப்படி தன் எண்ணங்களை நினைவுகளை பாடல் வரி மூலம் தக்க இலக்கணத்தோடு விவரிப்பதில் கை தேர்ந்தவர் கவிஞர் கண்ணதாசன்.