More
Categories: Cinema History latest news

கனகா நிலைமை இப்படி மோசமா போனதுக்கு காரணமே இவங்க தானா?.. புட்டு புட்டு வைத்த பிரபலம்!..

கரகாட்டக்காரன் திரைப்படம் வெளியாகி 35 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன நடிகை கனகா சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமாகியும் 35 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. கரகாட்டக்காரன் படத்தில் கனகாவுடன் நடித்த ராமராஜன் இன்னமும் சினிமாவில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சாமானியன் திரைப்படம் அவர் நடிப்பில் வெளியானது.

ஆனால், நடிகை கனகாவின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. சமீபத்தில் வெளியான அவரது புகைப்படத்தை பார்த்து பலரும் ஷாக் ஆகிவிட்டனர். கனகாவின் வாழ்க்கை சீரழிய முக்கிய காரணமே அவரது பெற்றோர்கள் தான் என மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் அளவுக்கு ஸ்கெட்ச் போடும் எஸ்கே!.. அடுத்து மலையாளத்துல இருந்து ஆள் இறக்குறாராம்!..

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் தான் கனகா என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். தேவிகா மற்றும் தேவதாஸ் தம்பதியினருக்கு மகளாக பிறந்த கனகா சினிமாவில் நடிக்க ஆரம்பித்த நிலையில் முதல் படமான கரகாட்டக்காரன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. தொடர்ந்து ராமராஜன், ரஜினிகாந்த், சரத்குமார், மோகன்லால், ஜெயராம், விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் கனகா நடித்துள்ளார்.

1989-ஆம் ஆண்டு நடிக்க ஆரம்பித்த கனகா 2000-ஆம் ஆண்டு கடைசியாக மலையாளத்தில் வெளியான நரசிம்மம் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி விட்டார். தமிழில் கடைசியாக அவர் நடித்த படம் விரலுக்கேத்த வீக்கம் தான்.

இதையும் படிங்க: குட்டி பாப்பா டிரெஸ் போட்டு எல்லாத்தையும் காட்டும் ரைசா வில்சன்!.. இது செம ஹாட்டு!..

கனகாவின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணமே அவரது அப்பா மற்றும் அம்மா தான் என சபிதா ஜோசப் கூறியுள்ளார். மகள் கனகாவை அவருடைய அப்பா தேவதாஸ் கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டுவார். பதிலுக்கு கனகாவும் தனது தந்தையை அசிங்கமான பச்சை வார்த்தைகளில் திட்டுவார்.  சூட்டிங் முடிந்து கனகா எங்கேயும் செல்லக் கூடாது என அவருடைய அம்மா ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் கனகா அதிக மன அழுத்தத்திற்கு உள்ளான நிலையில், அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலக முடிவு செய்தார். நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார். ஆனால் கனகா யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆண்கள் என்றாலே தனது அப்பாவைப் போல கொடுமையானவர்கள் தான் என்கிற எண்ணமே அவருக்கு வந்துவிட்டது. தேவிகா இறந்த பின்னர் இன்னமும் அவருடன் ஆவியாக பேசிக் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றனர். அம்மாவின் இறப்புக்கு பிறகு தான் கனகாவின் நிலைமை மோசமடைந்தது என சபிதா ஜோசப் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஒரு கோடி கொடுத்தும் சம்மதிக்காத ரஜினி!.. மனுஷனுக்கு இப்படி ஒரு கொள்கையா?!…

Published by
Saranya M

Recent Posts