ஓடிப்போன காதலனால் மார்க்கெட்டை இழந்த டாப் நடிகை… அடக்கொடுமையே!!

Kanaka
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வந்தார் கனகா. தெலுங்கு சினிமாவின் முன்னோடியாக கருதப்படும் தயாரிப்பாளர் ரகுபதி வெங்கையா நாயுடுவின் கொள்ளு பேத்திதான் கனகா. கனகாவின் தாயாரான தேவிகா இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.

Kanaka
ராமராஜனின் “கரகாட்டக்காரன்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கனகா, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். எனினும் ஒரு கட்டத்தில் இவரது மார்க்கெட் சரிய தொடங்கியது. மேலும் சினிமாவில் நடிப்பதற்கான விருப்பத்தையும் விட்டுவிட்டாராம்.
இந்த நிலையில் கனகாவின் மார்க்கெட் சரியத் தொடங்கியதற்கு பின்னால் உள்ள காரணத்தை குறித்து பிரபல நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் தனது வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

Kanaka
அதாவது கனகா ஒரு நபரை காதலித்து வந்தாராம். திடீரென ஒரு நாள் அந்த நபர் காணாமல் போய்விட்டாராம். அந்த காதலனை நினைத்துக்கொண்டே திருமணம் கூட செய்துகொள்ளாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போனாராம் கனகா. காதல் தோல்வியால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதாக பல கிசுகிசுக்கள் வந்தனவாம். மேலும் அவர் இறந்துவிட்டதாக கூட வதந்திகள் வந்தன.
தாயார் இறந்தபிறகு சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார் கனகா. அவர் தந்தையும் அந்த வீட்டில்தான் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. தனது வீட்டை விட்டு எப்போதும் கனகா வெளிவருவதே இல்லையாம். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கனகா வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பூஜை அறையில் விளக்கு பொருத்தும்போது தீப்பொறி அங்கிருந்த துணியில் பட்டு தீ பிடித்ததாக கூறப்படுகிறது. அதன் பின் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தார்கள்.