
Cinema News
கட்டி புடிச்சா டபுள் எனர்ஜி வருமா? சிம்புவைப் பற்றி பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் கூறிய ரகசிய தகவல்..
கிட்டத்தட்ட 90களில் இருந்து தற்போது வரை இந்திய சினிமா துறையில் ஒரு மதிப்பு மிக்க சண்டை பயிற்சியாளராக கருதப்படுபவர் நடிகரும் கதையாசிரியரும் சண்டை பயிற்சியாளருமான கனல்கண்ணன் அவர்கள். இவர் எல்லா முன்னனி நடிகர்களுக்கும் மாஸ்டராக பணியாற்றியுள்ளார்.
முன்பெல்லாம் மாஸ்டராக மட்டுமே இருந்துவந்த இவர் ஒரு காலகட்டத்திற்கு மேல் சண்டைக்காட்சிகளில் நடித்தும் கொடுத்திருக்கிறார். மேலும் இவரின் சண்டைக்காட்சிகளில் பெரும்பாலும் காமெடியும் கலந்து இருக்கும்.அதற்கு முக்கிய உதாரணமாக கமல் நடித்த அவ்வைசண்முகி படத்தை நினைவு கூறலாம். அந்த படத்தில் வரும் ஒரு சண்டை காட்சியில் காமெடியும் சேர்த்து இவரும் வந்து தன் பங்களிப்பைக் கொடுத்திருப்பார்.
நடிகர் சிம்புவுடன் கிட்டத்தட்ட 5 படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். ஒரு சமயம் இவர் சூட்டிங்கில் இருந்தபோது பக்கத்து சூட்டிங்கில் இருந்த சிம்பு ஓடி வந்து மாஸ்டரிடம் கட்டிபிடிங்க என கேட்டுள்ளார்.
ஏன் என கேட்க நீங்க கட்டிபிடிச்சா எனக்கு இன்னும் டபுள் எனர்ஜி கிடைக்கும் என சிம்பு கூறியுள்ளார். இதை மாஸ்டர் அவர்கள் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் கூறினார்.