இதுவே நானா இருந்தா தூக்குல தொங்கிருப்பேன்.. ஸ்டன்ட் மாஸ்டரை கலாய்த்த சூப்பர் ஸ்டார்!
கோலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இறுதியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் ரஜினி நடித்திருந்தார். அப்படத்தை தொடர்ந்து தற்போது இளம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ரஜினி நடிக்க உள்ளார்.
முன்னதாக ரஜினி நடிப்பில் வெளியான ஏராளமான படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. அதில் முக்கியமான படம் தான் படையப்பா. இப்படம் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. தற்போது படையப்பா படம் வெளியாகி கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது.
இந்நிலையில் இப்படத்தை கொண்டாடும் விதமாக படம் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் படையப்பா படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக பணிபுரிந்த கனல் கண்ணனும் படம் குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, "படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் என்னை எப்போதும் செட்டில் பயங்கரமாக திட்டுவார்.
என்னை அறிமுகம் செய்ததே அவர் தான் என்பதால் அவர் மீது எனக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. அப்படி அவர் என்னை பயங்கரமாக திட்டியதை பார்த்த ரஜினி சார் ஒருமுறை என்னை தனியாக அழைத்துச் சென்று இதுவே அவர் என்னை அப்படி திட்டி இருந்தால் தூக்கில் தொங்கி இருப்பேன் என விளையாட்டாக சொன்னார்" என்று கூறியுள்ளார்.