கேரவனில் கேமிரா வைச்சதே ராதிகா கம்பெனியில்தான்.. பகீர் கிளப்பிய பிரபலம்

by Rohini |   ( Updated:2024-09-06 14:47:39  )
radhika 2
X

radhika 2

Radhika: மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் பிரச்சினைகள் தொடர்பாக பேசுவதை விட நடிகை ராதிகா சொன்ன கருத்துதான் இப்போது பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. அதாவது கேரவனில் கேமரா பொருத்தி நடிகைகள் உடைமாற்றுவதை படப்பிடிப்பில் இருந்து கொண்டே நடிகர்கள் தங்கள் போனில் பார்த்து ரசித்திருக்கின்றனர் என ராதிகா பெரும் புரளியை கிளப்பியிருந்தார்.

அதனால் நான் பெரும்பாலும் ஹோட்டல் அறையில்தான் உடை மாற்றி வருவேன் என்றும் கூறியிருந்தார். இப்படி ஒரு தகவலை கூறிய பிறகு ராதிகாவுக்கு எதிராக பல பேர் கேள்விகளை கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒரு அனுபவமிக்க மூத்த நடிகையாக இருக்கக் கூடியவர் ராதிகா. அவர் கண் முன்னாடி இப்படி ஒரு அநியாயம் நடக்கும் பட்சத்தில் அவர் ஏன் இதை தட்டிக் கேட்கவில்லை என்று ராதிகாவை கேட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சொற்ப கோடிகள்தான் கோட் வசூல்… விஜய் கேரியரின் மோசமான ரெக்கார்ட்

மேலும் அந்த கேரவனில் கேமிரா பொருத்தப்பட்டதாக சொல்லும் பட்சத்தில் அதை பற்றியும் ராதிகாவிடம் விசாரணை நடத்தினார்கள் ஹேமா கமிட்டி. இந்த நிலையில் பிரபல திரைவிமர்சகரும் மருத்துவருமான காந்தராஜ் இதை பற்றி அவருடைய கருத்தை பகிர்ந்திருக்கிறார்.

கேரவன் கலாச்சாரமே 90களுக்கு பிறகுதான் வந்தது என காந்தராஜ் கூறும் நிலையில் அந்த காலத்தில் ராதிகா நடிகையாகவே இல்லை என்றும் காந்தராஜ் கூறியிருக்கிறார். அப்படியே கேரவனில் அவர் கேமிராவை பார்த்தேன் என்றும் சொல்லியிருந்தாலும் சீரியலில் தான் கேரவன் பயன்படுத்துகிறார்கள்.

இதையும் படிங்க: ‘கோட்’ படத்தை பார்த்து விக்னேஷ் சிவன் போட்ட பதிவு! ஈகோ இல்லாத ஆளுப்பா

அந்த நேரத்தில் ராதிகா சீரியலுக்கு வந்துவிட்டார். அப்போது பார்த்திருப்பாரோ இல்லையோ. ஒரு வேளை அவருடைய கம்பெனியில் கூட கேரவனில் கேமிரா வைத்திருக்கலாம் என காந்தராஜ் கூறியிருக்கிறார். இந்த ஒரு செய்திதான் இப்போது மிகவும் வைரலாகி போய்க் கொண்டிருக்கின்றது.

மேலும் ராதிகாவை பற்றி கூறும் போது மலையாளத்தில் சில படங்களில் மிக கவர்ச்சியாக ராதிகா நடித்திருக்கிறார் என்றும் முத்தக்காட்சியிலும் நடித்திருக்கிறார் என்றும் காந்தராஜ் கூறினார்.

இதையும் படிங்க: சினிமா வரலாற்றில் அஜித் படம்தான் அதில் நம்பர் ஒன்.. இவரே சொல்லிட்டாரே

மலையாள சினிமாவே பற்றி எரியும் நிலையில் ராதிகா பேசியதைத்தான் இப்போது வைரலாக்கி வருகின்றனர். இதை பற்றி ஒரு பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கின்றது. அடுத்ததாக நடிகைகள் தமிழ் சினிமா நடிகர்களை பற்றி எதுவும் சொல்லப்போகிறார்களா என்ற ஒரு பயமும் இருந்து வருகிறது.

Next Story