கரடியே காறிதுப்பிய சம்பவம்... இது என்னடா கங்கனாவுக்கு வந்த சோதனை....!
பாலிவுட்டில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் நான் தான் டாப் என பில்டப் செய்யும் நடிகை என்றால் அது கங்கனா ரனாவத் தான். எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சை கருத்தை கூறி மீடியாவின் கவனத்தை தன்பக்கமே வைத்திருப்பதில் கங்கனாவை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.
தற்போது கூட இவர் தொகுத்து வழங்கி வரும் லாக் அப் நிகழ்ச்சி சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் ஒரு தரமான சிறப்பான சம்பவம் நடந்துள்ளது. அதன்படி கங்கனா எப்போதும் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளையே தேர்வு செய்து நடிப்பார்.
அந்த வரிசையில் சமீபத்தில் கங்கனா நடிப்பில் உருவான படம் தான் தாக்கட். கடந்த 20 ஆம் தேதி வெளியான இந்த படம் சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக உருவாகியுள்ளது. இதனால் படம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்படியே எதிர்மறையாக படம் வெளியான முதல் நாள் முதலே குறைவான வசூலை பெற்று வருகிறது. மேலும் இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 8 நாட்களாகியும் தற்போது வரை வெறும் 3.5 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலாகியுள்ளது .
இதில் உச்சக்கட்ட அவமானம் என்னவெனில் படம் வெளியான 8 வது நாளில் இந்தியா முழுவதும் மொத்தமாக வெறும் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதனால் கங்கனா உள்ளிட்ட படக்குழுவினர் கடும் அப்செட்டில் உள்ளார்களாம். போட்ட பணத்தில் பாதி கூட இந்த படம் வசூலாகாது என கூறப்படுகிறது.