மகாபாரதம் தான் அவெஞ்சர்ஸ் எடுக்கவே இன்ஸ்பிரேஷன்.. கங்கனா ரனாவத் சொல்வதிலும் உண்மை இருக்குமா?

Published on: May 12, 2022
---Advertisement---

கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகும் படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் மண்ணைக் கவ்வி வருகின்றன. இந்நிலையில், அடுத்த ஃபர்னிச்சரை உடைக்க ரெடியாகி விட்டார் தலைவி நடிகை.

வரும் மே 20ம் தேதி கங்கனா ரனாவத் நடிப்பி உருவாகி உள்ள ஹெவி ஆக்ஷன் டிராமா தாக்கட் ரிலீசாகிறது. பீஸ்ட் விஜய் போல இந்த படத்தில் ஃபைட்டர் ஜெட்டை எல்லாம் ஓட்டி நடித்திருக்கிறார் கங்கனா ரனாவத்.

kangana ranaut

இந்நிலையில், அவெஞ்சர்ஸ் படங்களில் வரும் பெண் சூப்பர் ஹீரோவான பிளாக் விடோ போன்றது தான் தனது அக்னி கதாபாத்திரம் எனக் கூறியுள்ள கங்கனா ரனாவத். மகாபாரதத்தை காப்பி அடித்துத் தான் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்கள் உருவாக்கப்பட்டு இருப்பார்கள் என நினைக்கிறேன் என சமீபத்தில் வட இந்தியா மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

அயன்மேனின் சூட் தனக்கு கர்ணனின் கவச குண்டலத்தை நினைவுப்படுத்துவதாகவும், தோரின் அந்த சுத்தியல் ஆஞ்சநேய பகவான் கையில் வைத்திருக்கும் கதாயுதத்தை நினைவு படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஜேம்ஸ் கேமரூன் அவதார் படத்திற்கே ராமாயணம் தான் இன்ஸ்பிரேஷன் எனக் கூறியிருந்த நிலையில், மார்வெல் சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் இந்திய இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளில் இருந்து இன்ஸ்பயர் ஆகி அங்கே காமிக்ஸ் கதாபாத்திரங்களாக உருவாக்கப்பட்டு இருக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் வெளியான டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தின் மூலக் கதையில் அவருக்கு இந்தியா அருகே இருக்கும் நேபாளத்தில் உள்ள கமர் தாஜ் எனும் இடத்தில் தான் மத குரு மூலம் மாயாஜல சக்தி கிடைக்கும் என காட்டியிருப்பார்கள். டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் படத்திலும் சிவபெருமானுக்கு இருப்பது போல நெற்றியில் மூன்றாவது கண்ணும் தோன்றும். ஸ்கார்லெட் விட்ச் கதாபாத்திரமே விநாயகரை சிவன் தாக்கியவுடன் காளி மாதாவாக பார்வதி எடுக்கும் அவதாரம் தான் என்றும் நெட்டிசன்கள் ஏகப்பட்ட டீகோடிங்கை செய்து வருகின்றனர்.

நம் இதிகாச சூப்பர் ஹீரோக்களை பிரம்மாண்டமான படங்களாக உருவாக்கினால் அவெஞ்சர்ஸ் எல்லாம் அதற்கு முன்னதாக ஒன்றுமில்லை என்றும் கங்கனா ரனாவத் தனது பேட்டியில் கூறியுள்ளார். மற்றொரு பேட்டியில் தான் திமிரு பிடித்தவள் என்றும், ஆண்களையே அடித்து ஓடவிடுவேன் என கிளப்பி விடப்பட்ட சில வதந்திகளால் தான் தனக்கு திருமணமே நடைபெறவில்லை என்றும் கலகலப்பாக பேசி உள்ளார் கங்கனா ரனாவத்.
எல்லாம் சரி, தாக்கட் திரைப்படமாவது பார்க்கும் அளவுக்கு இருக்குமா? இல்லை இதிலும் வழக்கம் போல ஓவர் ஆக்டிங் தானா என நெட்டிசன்கள் கங்கனா ரனாவத்தை கலாய்த்து வருகின்றனர்.

crdesk

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment