நான் யாரை காதலிக்கிறேன் தெரியுமா..?ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கங்கனா!!

ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர் நடிகை கங்கனா ரனாவத். தமிழில் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின்னர் இவர் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப்படமான 'தலைவி' படத்தில் நடித்திருந்தார்.
இயக்குனர் விஜய் இயக்கிய இப்படம் சமீபத்தில் தியேட்டரில் வெளியானது. இப்படம் தியேட்டரில் சரியாக ஓடவில்லை என்றாலும் ஓடிடி-யில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. சர்ச்சை நாயகியான கங்கனா முன்னதாக பல கிசுகிசுக்களில் சிக்கியுள்ளார்.
இவர் ஹிந்தியில் க்ரிஷ் படத்தில் நடித்தபோது அந்தப்படத்தின் நாயகன் ஹிருத்திக் ரோஷனுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் காதலித்து வந்தநிலையில் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக பிரிந்துவிட்டனர்.

kangana ranaut
கங்கனா எப்போதும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு பிரச்சனையில் சிக்கிக்கொள்வது வழக்கம். பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டு இவர் தன்னை பிஜேபி கட்டியில் இணைத்துக்கொண்டார்.
தொடர்ந்து பிஜேபிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் இவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இவர், தனக்கு திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் ஆசை உள்ளது என கூறினார்.
மேலும், தான் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார். அவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன் என கூறியுள்ளார். அவர் யாராக இருக்கும் என ரசிகர்கள் இப்போதே கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர்.