பாகிஸ்தானிலும் இந்த தமிழ் படம்தான் முதல் இடம்.. நடிகை என்ன சொன்னார் தெரியுமா?

by adminram |   ( Updated:2021-10-13 12:09:09  )
gangana
X

தல அஜித் நடித்த 'கிரீடம்' படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஏ.எல். விஜய். இவர் பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனாவார். தேவி-2, வாட்ச்மேன் ஆகிய படங்களைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'தலைவி'.

இதில் அரவிந்தசாமி எம்.ஜி.ஆராகவும் ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாகவும் நடித்திருந்தார்கள். இப்படம் கடந்த மாதம் 10ம் தேதி திரையரங்கில் வெளியானது. இது மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தியேட்டரில் தோல்விப்படமாக அமைந்தது.

kangana ranaut

kangana ranaut

இப்படத்தில் ஜெயலலிதாவின் அரசியலை பற்றி அதிகம் பேசாமல் அவர் பயணத்தைப் பற்றி பேசியதே இதன் தோல்விக்கு காரணமாக கூறப்பட்டது. ஏ.எல்.விஜய்யின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார்தான் இப்படத்திற்கும் இசையமைத்திருந்தார்.

இப்படம் தியேட்டரில் வெளியான அதே நாளே ஹிந்தி, மலையாளத்தில் ஓடிடி-யில் வெளியானது. ஆனால், தமிழில் இப்படம் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் ஓடிடி-யில் வெளியானது. ஹிந்தியில் தியேட்டரில் பிளாப் ஆன இப்படத்தை ஓடிடி-யில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது பாகிஸ்தான் நெட்பிளிக்சிலும் கூட இப்படம்தான் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், 'ஒரு ஜாலியான குறிப்பு... துரோகிகள் நம் நாட்டில் மட்டும் இல்லை' என்று குறிப்பிட்டு இருக்கிறார் கங்கனா. கங்கனா ஹேட்டர்ஸ்களைத்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என கூறுகிறார்கள்.

Next Story