latest news

உங்களை நினச்சா பாவமா இருக்கு!… ஏ.ஆர்.ரஹ்மானை வம்பிழுத்த கங்கனா ரனாவத்!…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்தவர் கங்கனா ரனாவத். தமிழில் மறைந்த இயக்குனர் ஜீவா இயக்கிய தாம்தும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிக்க தொடங்கினார். மேலும், ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றிருந்த பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. ஆனால் ஒரு கட்டத்தில் ரித்திக் ரோஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்,

அதோடு பாஜக கட்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டார். இவருக்கு சில பதவிகளும் கொடுக்கப்பட்டது. தற்போது அவருக்கு லோக்சபா எம்.பி.பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் எமர்ஜென்சி என்கிற படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்திலும் கங்கனா நடித்திருந்தார்.
மேலும் சந்திரமுகி 2 படத்திலும் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் ஓடவில்லை. இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானை கடுமையாக விமர்சித்து பேசியிருக்கிறார் கங்கனா.

எமர்ஜென்சி படத்தின் கதை உங்களிடம் சொல்ல முயற்சி செய்தேன்.. கதை கேட்பதை விடுங்கள்.. ஆனால் நீங்கள் என்னை சந்திக்கக் கூட மறுத்து விட்டீர்கள்.. ஒரு பிரச்சார படம் என்பதால் அதில் இசையமைக்க உங்களுக்கு விருப்பமில்லை என சொல்லப்பட்டது.. உங்கள் வெறுப்புணர்வு உங்களை குருடாக்கிவிட்டது. உங்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது’ என பேசியிருக்கிறார்.

Published by
சிவா