Kanguva: படம் பேரு கத்துவா-ன்னு வச்சிருக்கணும்!... கங்குவாவை கலாய்க்கும் ஃபேன்ஸ்!....

by Akhilan |   ( Updated:2024-11-14 10:40:00  )
kanguva
X

#image_title

Kanguva: சூர்யா நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தில் இருக்கும் கேரக்டர்கள் தேவையே இல்லாமல் கத்திக் கொண்டிருப்பதாக கமெண்ட்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கங்குவா திரைப்படம்: சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கருணாஸ், கலைவாணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க:Kanguva Review: சூர்யா ஓபனிங் சீன் தெறி… கங்குவாவின் வெறியாட்டம்… டிவிட்டர் விமர்சனம் இதோ…

தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைப்பு செய்திருக்கிறார். ஸ்டுடியோ கிரீன்ஸ் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருக்கிறார். முதல் முறையாக நடிகர் சூர்யாவின் திரைப்படம் வட இந்தியாவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.

கங்குவா ரிலீஸ்: கங்குவா திரைப்படம் ரிலீஸாக இருந்த ஒரு மாதம் முன்பிலிருந்து நடிகர் சூர்யா பல மாநிலங்கள் பயணம் செய்து பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இதற்காக அவர் கொடுத்த பல பேட்டிகள் இணையத்தில் வைரலாக மாறியது.

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பின்னர் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற சிறப்பு தோற்றத்தில் மட்டுமே நடிகர் சூர்யா நடித்திருந்தார். இதனால் ஹீரோவாக அவர் மீண்டும் திரையில் 980 நாட்களுக்குப் பிறகு தன்னுடைய ரசிகர்களுக்கு காட்சியளித்திருக்கிறார்.

முதல் காட்சியின் முதல் பகுதி முடிந்த நிலையில் படம் மிகப்பெரிய அளவில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் சிறுத்தை சிவாவின் இயக்கம் தரமாக இருப்பதாகவும் கமெண்ட்களை இணையத்தில் காண முடிகிறது. பாகுபலி போன்ற பிரம்மாண்ட படமாக இது அமைந்திருப்பதாக பலரும் பேசி வருகின்றனர்.

இதையும் படிங்க: கங்குவா படத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஐகோர்ட்!… ஆனா ஒரு கண்டிஷன்?!…

கத்துவா-ன்னு மாறிய கங்குவா: ஆனால் நேரம் செல்ல செல்ல கங்குவா திரைப்படத்தில் சில கோளாறுகள் இருப்பதாக கமெண்ட்கள் குவிய தொடங்கி இருக்கிறது. இது குறித்து பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பதிவில் இருந்து, கருணாஸ் முதல் கலைவாணி வரை எதற்காக கத்திக்கொண்டே இருக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை.

Kanguva

Kanguva

அதுவும் ஸ்லோ மோஷனில் நடப்பதால் உங்களுக்கு நிறைய பஞ்சுகள் தேவைப்படும். ஏற்கனவே பிரச்சினையாக இருக்கும் காதுடன் இந்த படத்திற்கு வந்தது தப்புதான். இதற்கு கத்துவா என பெயர் வைத்திருக்கலாம். கத்தாம படம் பாருங்கப்பா. கத்துறதே படத்தில் இருப்பவர்கள் தான் பா என அவர் போட்டிருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Next Story