Kanguva: கங்குவா திரைப்படம் இன்று உலகம் எங்கும் வெளியாகி இருக்கும் நிலையில் எக்ஸ் வலைதளத்திலிருந்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகி இருப்பதாக தகவல்கள் கசிந்தது.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் திரைப்படம் கங்குவா. திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பு செய்திருக்கிறார். இரட்டை வேடங்களில் நடிகர் சூர்யா 980 நாட்களுக்கு பின்னர் திரையில் காட்சி கொடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: கங்குவா படத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஐகோர்ட்!… ஆனா ஒரு கண்டிஷன்?!…
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், கருணாஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்து இருக்கின்றனர். இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வட இந்தியாவிலும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
உலகம் எங்கும் 11 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் கசிந்தது. பலமுறை ரிலீஸ் தள்ளி போனது, நீதிமன்ற பிரச்சனைகள், மழையால் ஏற்பட்ட தடங்கல், குறைவான தமிழக திரையரங்குகள், காட்சி குறைப்புகள் என கங்குவா நிறைய பிரச்சனைகளை சந்தித்தது.
இந்நிலையில் இன்று முதல் காட்சி வெளியானதில் இருந்து கங்குவா திரைப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. சூர்யாவின் நடிப்பு மற்றும் சிறுத்தை சிவாவின் இயக்கம் இரண்டுமே பாராட்டுகளை பெற்று வருவது ஆச்சிரியம் அளிக்கிறது.
இதையும் படிங்க: Kanguva Review: சூர்யா ஓபனிங் சீன் தெறி… கங்குவாவின் வெறியாட்டம்… டிவிட்டர் விமர்சனம் இதோ…

அது குறித்து விசாரிக்கும் போது, தென்னிந்தியாவின் நடிகருடைய திரைப்படத்திற்கு இது செய்வது சாத்தியமில்லை. இது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி தான் என தகவல்கள் வெளியானது. மற்ற நெட்டிசன்களும் தங்களுக்கு முயற்சி செய்து நடக்கவில்லை என்ற கமெண்ட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
