Connect with us
Kanguva

Cinema News

Kanguva: 2 ஆயிரம் கோடி உருட்டுனது பொய்யா? சென்னையில் காத்து வாங்கும் கங்குவா…

Kanguva: கங்குவா திரைப்படம் உலக அளவில் இன்று வெளியாகி இருக்கும் நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.

ஞானவேல் ராஜா சார்பில் ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் திரைப்படம் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். சூர்யாவுடன் பாபி தியோல், திஷா பதானி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: Kanguva: சிவா Unfit ஆ… கங்குவா ரிலீஸ் தேதியில் மோசமான திட்டம்… அடி வாங்கிய ஞானவேல்ராஜா…

இப்படத்தின் ரிலீஸ் இருக்கு இரண்டு வாரங்கள் முன்பில் இருந்து படக்குழு மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன் செய்தது. நடிகர் சூர்யா பல மாநிலங்கள் பயணம் செய்து அங்கிருக்கும் செய்தியாளர்களை நேரில் சந்தித்து படத்தை பிரமோட் செய்வதில் ஆர்வமாக இருந்தார்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படத்தை 38 மொழிகளில் வெளியிட போகிறேன் என பலவாறு பேசி வந்தார். ஆனால் தற்போது படம் 18 மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. சூர்யா தான் முதல் ஃபேன் இந்தியா நட்சத்திரம் என ஞானவேல் ராஜா பேசிக் கொண்டிருக்கிறார்.

திரைப்படம் 2000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என அவர் பேசியதை ரசிகர்கள் பலர் விமர்சித்து வந்தனர். ஆனால் படத்தின் பிரம்மாண்டம் ஓரளவு 1000 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் திரைப்படம் 200 கோடியை தாண்டி கோட் வசூலையாவது முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இதையும் படிங்க: Karthi: பாகுபலி காலகேயனே தோத்துருவார் போல.. ‘கங்குவா’ படத்தில் கார்த்தியின் கெட்டப் இதோ

ஏனெனில் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் தமிழகத்தில் ஆயிரம் திரையரங்குகள் வரை வெளியானது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் எல்லா திரைகளிலும் வெளியிடப்பட்டது. ஆனால் கங்குவா நிலைமையே வேறு. முக்கிய திரையரங்குகளில் இன்னும் எல்லா காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் ஆகும் நிலைமை கூட இல்லை.

நாளை முக்கிய திரையரங்குகளை தேடும் போது கோட் மற்றும் அமரனுக்கு எபிசோட் வரை வெளியிட்ட நிலையில் கங்குவா திரைப்படத்திற்கு ஒரு ஷோ மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கங்குவா தமிழகத்தில் வசூலில் பெரிய இடி விழுகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top