இதுக்கு கூட நீங்க லாயக்கு இல்ல… கங்குவா படத்தை அடித்து தொங்கவிட்ட பிரபலம்..

Published on: November 14, 2024
kanguva
---Advertisement---

Kanguva: கங்குவா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் முதல் காட்சியில் இருந்து கலவையான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் பிரபல திரை விமர்சகர் பிரசாந்த் விமர்சனம் செய்து இருக்கிறார்.

படத்தில நல்லது சூர்யா மட்டும்தான். வேற யாருமே இல்லை. அந்த காஷ்ட்யூமை போட்டுக்கொண்டு எகிறி குதித்து அவர் ஓடியது எல்லாம் வேற ரகம். இப்படி ஆக்‌ஷன் காட்சிகளை ஒரு பக்கமும், எமோஷனல் கனெக்டில் கண்ணை வைத்து மொத்தமாக கூஸ் பம்ஸ் கொடுக்கிறார்.

இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்துல பாசிட்டிவ்ஸ் விட நெகடிவ்ஸ் அதிகமா இருக்கே?!… இப்படி சாய்ச்சு புட்டிங்களேப்பா!…

சூர்யாவோட கண்ணு அவருக்கு லைஃப் டைம் கிப்ட். இரண்டு எக்ஸ்ட்ரீம் சூர்யாவை காட்சிப்படுத்திய போது பட்டாசா பண்ணி இருக்காங்க. இந்த படத்தோட இன்னொரு அசெட் ஒளிப்பதிவாளார் வெற்றிதான். நேச்சுரல் லைட்டிங்கில் எடுத்து இருக்காங்க. ஒரு பனி இருந்துக்கிட்டே இருக்குது.

அது படத்தோட இரண்டாம் பகுதியை கனெக்ட் செய்ய காரணமா இருக்குது. செட்டையும், உண்மையான இடத்தையும் வித்தியாசம் இல்லாமல் காட்ட வெற்றி உதவி இருக்கிறார். ஆச்சரியமா இருக்குது. ஜூனியர் ஆர்டிஸ்ட்டும் இந்த படத்துக்கு முக்கிய பங்காக இருக்கின்றனர்.

இந்த படத்தில நிறைய நெகட்டிவ் இருக்கு. சில இடத்தில் பிரபல நடிகர்கள் கூட ஓவர் மேக்கப்பில் யாருனே தெரியாம இருக்காங்க. வில்லனை மிரட்டலா காட்டணும்னு கொடூரமா காட்ட ட்ரை பண்ணுறாங்க. ஆனா அந்த பயம் நமக்கு டிரான்ஸ்பர் ஆகவே இல்லை. 

இதையும் படிங்க: கயல் முதல் மருமகள் வரை… சன் டாப் 5 தொடர்களின் புரோமோ… இத பாருங்க!..

எல்லாமே நல்லா இருந்தாலும் ஸ்கீரின்பிளே சரியா இருந்தால்தான் அந்த பயம் ரசிகர்களுக்கு இருக்கும். கங்குவா கேரக்டர் பல இடத்தில் பட்டாசா இருக்கு. சில இடங்களில் முரணா இருக்கு. முதல் 20 நிமிடத்தில் கோவாவில் வரும் காமெடிகள் படு மோசமான கிரிஞ்சாக இருக்கு.

அந்த காட்சிகள் வேஸ்ட்டுதான். பாட்டு பாதி நல்லா இருக்கு. ஏன்னா ரொம்ப சத்தமா இருக்கதே காதை கிழிக்குது. 200 டெசிபிள் காதை கிழிக்கிற மாதிரி சவுண்ட் இருந்துக்கிட்டே இருக்கு. திஷா பதானி எதுக்கு இருக்காங்கனு தெரியாது. நிறைய கேரக்டர்கள் தேவையே இல்லை.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.