Kanguva: சூர்யாவின் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் கங்குவா. அதற்கு காரணம் 2 வருடங்களாக சூர்யாவின் எந்த படமும் வெளியாகவில்லை. கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் படமும் சரியாக ஓடவில்லை. அப்போதுதான் சிறுத்தை சிவா உருவாக்கிய சரித்திர கதையை கேட்டார் சூர்யா.
ராஜமவுலி: ராஜமவுலியின் பாகுபலி போல நாமும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் சம்மதம் சொன்னார். சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா மிகவும் அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்க முன்வந்தார். ஏனெனில் அவருக்கும் ராஜமவுலியை மிகவும் பிடிக்கும் என்பது முக்கிய காரணம்.
இதையும் படிங்க: Vijay sethupathi: விஜய் சேதுபதியின் வாழ்க்கையை மாற்றிய திரைப்படம்… பிரபல இயக்குனரின் ’ரியல் லைஃப்’ சம்பவமாம்…
நாம் எல்லோரும் செல்போனில் நம்முடைய, நமது குடும்பம் அல்லது குழந்தைகளின் புகைப்படத்தை வால் பேப்பராக வைத்திருப்போம். ஆனால், ஞானவேல் ராஜா ராஜமவுலியின் புகைப்படத்தை வைத்திருக்கிறார் என சூர்யாவே கங்குவா பட புரமோஷனில் சொன்னார். சுமார் 300 கோடி பட்ஜெட்டில் கங்குவா படம் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.
அதோடு, இந்த படம் பாகுபலியை போல இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகம் வருகிற 14ம் தேதி உலகமெங்கும் பல மொழிகளிலும் வெளியாகவுள்ளது. கங்குவா முதல் பாகம் 2 ஆயிரம் கோடியை வசூல் செய்யும் என ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்.

கங்குவா வசூல்: இதை பலரும் கிண்டலடித்தாலும் இதுபற்றிய கேள்விக்கு ‘அதிகமாக கனவு காண்பதில் என்ன தவறு?’ என கேட்டார் சூர்யா. இப்படத்தை சூர்யாவும் பல ஊர்களுக்கும் சென்று புரமோஷன் செய்து வருகிறார். இந்நிலையில்தான், இப்படத்தின் முன்பதிவில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
கங்குவா முன்பதிவு: வசூலை பிரித்துக்கொள்வதில் வினியோகஸ்தர்களுக்கும் திரையரங்க உரிமையாளர்களுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. வசூலில் 75 சதவீதத்தை வினியோகஸ்தர்கள் கேட்பதால் திரையரங்க உரிமையாளர்கள் டிக்கெட் முன்பதிவை இன்னும் துவங்கவில்லை என சொல்லப்படுகிறது. விரைவில் இருவருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு கங்குவா படத்திற்கான முன்பதிவு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Nepoleon: எங்கேயோ ஒரு மூலைல உட்கார்ந்து கமெண்ட் போடுற உனக்கு என்ன தெரியும்? நெப்போலியன் ஆவேசம்!
