கோட் - தங்கலான் படத்தை வச்சி கங்குவாவை ஹிட் அடிக்க பிளான்!. இது செம ஸ்கெட்ச்சா இருக்கே!..

by சிவா |   ( Updated:2024-08-12 13:45:22  )
kanguva
X

Ganguva: 60 முதல் 90 கால கட்டம்வரை சினிமாவிற்கு விளம்பரே தேவையில்லை. ஏனெனில் மக்களின் ஒரே பொழுதுபோக்காக தியேட்டர்கள் இருந்தது. 4 காட்சிகளுக்கும் கூட்டம் செல்லும். குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு போவார்கள். விளம்பரம் எனில் அதிகபட்சம் செய்தி தாள்களில் விளம்பரம் கொடுப்பார்கள். அவ்வளவுதான்.

ஆனால், கடந்த சில வருடங்களாகவே மக்கள் அதிகம் மூழ்கி கிடப்பது சமூகவலைத்தளங்களில்தான். குறிப்பாக டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றை பலரும் பயன்படுத்துகிறார்கள். எனவே, திரைப்படங்கள் குறித்த எல்லா அப்டேட்டுகளும் அதில்தான் வெளியாகிறது.

இதையும் படிங்க: ‘தங்கலான்’ படத்தை சத்தியமா பார்க்க மாட்டேன்! படமா எடுக்குறானுங்க? இவரே இப்படி சொல்லலாமா?

குறிப்பாக ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் வீடியோ, டீசர், டிரெய்லர் என எல்லாமே சமூகவலைத்தளங்களில்தான் வெளியாகிறது. ஆனாலும், தியேட்டர்களிலும் புதுப்படங்கள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டே வருகிறார்கள். அப்படி கங்குவா படத்திற்கு தியேட்டர் மூலம் கல்லா கட்ட திட்டமிட்டிருக்கிறது படக்குழு.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. ஹாலிவுட் பட பாணியில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 230 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதிக பட்ஜெட் என்பதால் இரண்டு பாகங்களாக இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

kanguva

இதில், முதல் பாகம் அக்டோபர் 10ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இதே தயாரிப்பாளர்தான் விக்ரம் நடிப்பில் வருகிற 15ம் தேதி வெளியாகவுள்ள தங்கலான் படத்தையும் தயாரித்துள்ளார். எனவே, தங்கலான் படம் வெளியாகும் தியேட்டர்களில் இடைவேளையில் கங்குவா பட டிரெய்லரை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல், வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள கோட் படத்தின் இடைவேளையிலும் கங்குவா பட டிரெய்லரை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். கோட் படம் ஆயிரத்திற்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகவிருப்பதால் கங்குவா படத்திற்கு இது ஒரு நல்ல புரமோஷனாக அமையும் என கணிக்கப்படுகிறது.

Next Story