கங்குவா படத்தால் சூர்யா கேரியரில மாற்றம்… ரோலக்ஸ்ல நடிச்சாலும் சிக்கல் இருக்கு…! பிரபலம் சொல்லும் தகவல்

Published on: November 18, 2024
surya
---Advertisement---

ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான படம் கங்குவா. இந்தப் படம் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் என்று நினைத்த படக்குழுவினருக்கு தலையில் இடிவிழுந்த மாதிரி ஆகிவிட்டது. படம் பெரிய நஷ்டத்தை உண்டுபண்ணி விட்டது. இந்தப் படம் 2000 கோடி வசூலை அள்ளும் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறி இருந்தார்.

பெரிய ஹைப்

Also read: மருமகள் முதல் கயல் வரை… சன் டிவி டாப்5 தொடர்களின் இன்றைய சூப்பர் அப்டேட்!..

அதனால் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய ஹைப் உண்டானது. ஆனால் ரிலீஸ்சுக்குப் பிறகு படத்தை சமூக வலைதளங்களில் பீஸ் பீஸாகக் கிழிக்கிறார்கள். இப்படி இந்தப் படம் பெரிய பின்னடைவை சந்திக்கும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் படத்திற்காக போட்ட உழைப்பு அதிகம் தான். ஆனால் பலன் இல்லாதது தான் வேதனை.

surya
surya

ஜோதிகா கூட படத்தில் உள்ள பாசிடிவ்வான விஷயங்களைப் பாருங்க. ஏன் நெகடிவை மட்டும் பேசுறீங்க என்றார். அதே போல படத்திற்கு வரும் நெகடிவ் விமர்சனங்களே படத்திற்கு நல்ல புரொமோஷன் தான் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

கங்குவா பார்த்தீர்களா?

‘இந்தப் படம் பார்த்தீர்களா’ என்று பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்கப்பட்ட போது ‘படத்திற்கான விமர்சனங்களைத் தொடர்ந்து அந்தப் படத்தைப் பார்ப்பதைக் கொஞ்சம் தள்ளிப் போட்டு இருக்கிறேன். இருந்தாலும் படத்தைக் கண்டிப்பாகத் தியேட்டரில் சென்று பார்ப்பேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சூர்யாவோட கேரியரில் கங்குவா படம் எப்படிப்பட்ட மாற்றத்தைக் கொடுத்துருக்குன்னு வாசகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேள்வி கேட்டுள்ளார்.

தடைக்கல்

அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். ‘சூர்யாவுடைய திரைப்பயணத்தில் கங்குவா படம் மிகப்பெரிய படிக்கல்லாக இருக்கும்னு தான் நான் உள்பட எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது இப்போது ஒரு தடைக்கல்லாக அமைந்து இருக்கிறது என்பது தான் உண்மை’ என்றார்.

ரோலக்ஸ்

அதே போல ‘சூர்யா தொடர்ந்து ரோலக்ஸ் மாதிரியான வில்லன் கதாபாத்திரத்துல நடிச்சா நல்லாருக்கும்ணு தோணுது. இதைப் பற்றி உங்க கருத்து என்ன’ன்னு இன்னொரு வாசகர் கேள்வி கேட்டு இருந்தார். அதற்கு சித்ரா லட்சுமணன் சொன்ன பதிலைப் பாருங்க. ‘சூர்யா ரோலக்ஸ் மாதிரியான வில்லன் கதாபாத்திரத்துல நடிச்சா நிச்சயமா நல்லாருக்கும் என்பதுல எந்த சந்தேகமும் இல்லை.

அவங்க முக்கியம்

Also read: Kanguva: சூர்யா என்ன பணத்தை சுருட்டிக்கிட்டி ஓடிட்டாரா?!.. பிரபல இயக்குனர் காட்டம்!…

ஆனா அது போன்ற கதாபாத்திரங்களை எழுதுவதும், இயக்குவதும் யார் என்பதைப் பொறுத்துத் தான் அந்தக் கதாபாத்திரம் வெற்றி அடையும். அதனால அவங்க ரொம்ப முக்கியம். அந்தக் கதாபாத்திரம் இடம்பெற்றுள்ள திரைப்படமும் வெற்றி அடையும்.’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.