கங்குவா திரைப்படத்தை கோயம்புத்தூரில் ஒரு திரையரங்கில் மட்டும் காலை 7 மணிக்கு வெளியிட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
கங்குவா திரைப்படம்: நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருக்கின்றார். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார். சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், போஸ் வெங்கட், நடிகர் கருணாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
நாளை ரிலீஸ்: மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 10-க்கு மேற்பட்ட மொழிகளில் உலகம் முழுவதும் இப்படத்தை படக்குழுவினர் வெளியிட இருக்கிறார்கள். 11000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: இப்படி நீங்க பண்ணக்கூடாது?!… அமரன் டீமுக்கு முக்கிய கோரிக்கை வைத்த திரையரங்கு உரிமையாளர்கள்!…
படத்தின் ப்ரோமோஷன்: கடந்த இரண்டு வாரங்களாக படக்குழுவினர் கங்குவா படம் தொடர்பாக ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வந்தார்கள். நடிகர் சூர்யா இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் சென்று படம் குறித்து ப்ரோமோஷன் செய்து வந்தார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், துபாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு நடிகர் சூர்யா சென்று படம் குறித்து ப்ரோமோஷன் செய்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வந்தது.
சிறப்பு காட்சி: பொதுவாக பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானால் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படுவது வழக்கம் தான். ஆனால் தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கங்குவா படத்தின் தயாரிப்பாளர் சார்பாக சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருந்த காரணத்தால் காலை 9 மணி தொடங்கி இரவு 2 மணி வரை 5 காட்சிகள் ஒளிபரப்பி கொள்வதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தி சூர்யா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இருப்பினும் அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி காட்சியில்லை என்பது பலருக்கும் வருத்தம் தான். தமிழ்நாடு தவிர கேரளா, பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இருக்கின்றது.
கோயம்புத்தூர் : இந்நிலையில் தமிழகத்தில் அதிகாலை 4 மணி அளவில் 7 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் கோயம்புத்தூரில் ஒரு திரையரங்கில் மட்டும் காலை 7 மணிக்கு கங்குவா படத்தின் பிரீமியர் ஷோ வெளியாக இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி இருக்கின்றது. இதனை அந்த திரையரங்கு உரிமையாளரே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: Gossip: விவாகரத்தான வாரிசு நடிகரை மடக்கிய தமிழ் நடிகை.. திடீர் திருமணத்தின் பின்னணி..
இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறுவது சகஜம் தான் என்னதான். தமிழக அரசு அதிகாலை காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது என்று தடை விதித்து இருந்தாலும், அதையும் மீறி சில திரையரங்குகள் சிறப்பு காட்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அதனை அதிகாரத்தில் இருப்பவர்களும் கண்டு கொள்வது கிடையாது. அப்படிதான் கோயம்புத்தூரில் பிராட்வே சினிமாஸ் திரையரங்கில் நாளை காலை 7 மணி சிறப்பு காட்சி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கோயம்புத்தூரில் இருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
Vijay serials:…
கங்குவா படம்…
கங்குவா படம்…
தமிழ் சினிமாவில்…
கங்குவா திரைப்படம்…