இது வேற வேறலெவல் வெறித்தனம்!.. வெளியானது கங்குவா பட புது போஸ்டர்!..
Kanguva: சமீபகாலமாக நடிகர் சூர்யா நடிப்புக்கு தீனி போடும் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடித்து வெளியான சூரரைப்போற்று படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படம் உலக அளவில் பல விருதுகளையும் பெற்றது.
அதேபோல், இருளர் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக போராடும் வழக்கறிஞர் வேடத்தில் அவர் நடித்த ஜெய்பீம் திரைப்படம் வேற லெவலில் இருந்து. இந்த படமும் விருதுகளை பெற்றது. உண்மை கதையை எடுத்து அதற்கு அழகாக திரைக்கதை அமைத்திருந்தார் இயக்குனர் தா.செ.ஞானவேல் ராஜா. இப்போது இந்த இயக்குனர் ரஜினியை வைத்து வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படிங்க: நமக்கு சோறு போட்டவருக்கா இந்த நிலைமை?.. இயக்குனரின் நிலை கண்டு கண்கலங்கிய தயாரிப்பாளர்
அதேபோல், சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பல வருடங்களுக்கு நடக்கும் ஒரு சரித்திர கதை போல உருவாகி வருகிறது. எனவே, வித்தியாசமான தோற்றத்தில் இப்படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதற்கு காரணம் சூர்யாவின் கெட்டப்தான். அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் சிவாவுக்கு இந்த படம் பெயர் வாங்கி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் திஷா பத்தானி, ரெட்டிங் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகிபாபு என பலரும் நடித்திருக்கிறார்கள்.
மேலும், பாலிவுட் நடிகர் பாபி தியோல் இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். எனவே, கங்குவா படம் ஹிந்தியிலும் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பாபி தியோல் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் புதிய போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூகவலைத்தளங்களில் சூர்யா ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: விஜயகாந்த் நடிக்க மறுத்த 15 திரைப்படங்கள்!.. அவருக்கு பதில் நடித்த நடிகர்கள் யார் தெரியுமா?..
COPYRIGHT 2024
Powered By Blinkcms