Cinema News
கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடுமா?.. ஞானவேல் ராஜா செய்த வேலை!.. கலாய்க்கும் ஃபேன்ஸ்..
Kanguva: சூர்யாவின் நடிப்பில் உருவாகி நேற்று வெளியான திரைப்படம்தான் கங்குவா. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். சூர்யாவின் உறவினரும் பிரபல தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா இப்படத்தை அதிக பட்ஜெட்டில் உருவாக்கியிருந்தார். ஹாலிவுட் ஸ்டைலில் கங்குவா ஒரு சரித்திர கதை கொண்ட திரைப்படமாக வெளிவந்திருக்கிறது.
1000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதை போல காட்டப்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமான வேடத்தில் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. இப்படம் தொடர்பாக வெளியான போஸ்டர்களும், டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோக்கள் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: Sivakarthikeyan: திட்டம் போட்டே சிவகார்த்திகேயன் பண்ண வேலை.. கங்குவாவுக்கு எதிரா திரும்பியிருச்சே!
இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி மற்றும் நடிகர் பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் நேற்று உலகம் முழுவதும் பல மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்காக படக்குழு அதிக அளவில் புரமோஷன் செய்தது.
இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அதிக தன்னம்பிக்கையுடன் நிறைய பேசினார். இந்த படம் 2 ஆயிரம் கோடி வசூல் செய்யும், டிசம்பர் மாதம் படத்தின் சக்சஸ் மீட் நடக்கும் என என்னென்னவோ சொன்னார். ஆனால், படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.
படத்தின் கதை என ஒன்றுமில்லை. திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை. படத்தில் வரும் எந்த காட்சியோடும் ஒன்ற முடியவில்லை என பலரும் சொன்னார்கள். குறிப்பாக எல்லா காட்சியிலும் யாராவது கத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஒருபக்கம், பின்னணி இசை என்கிற பெயரில் எல்லா காட்சியிலும் வ்ரும் சத்தம் காதை கிழிக்கிறது. காது வலியே வந்துவிட்டது என பலரும் புகார் சொன்னார்கள்.
இந்நிலையில், கங்குவா வெளியாகும் தியேட்டர்களில் ஒலி அளவை 2 புள்ளிகள் குறைக்க சொல்லி திரையரங்க உரிமையாளர்களிடம் சொல்லி இருப்பதாக இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறியுள்ளார். இதனையடுத்து, கண்ணாடியை திருப்புனா ஆட்டோ ஓடுமா?. படமே நல்லா இல்ல.. இத பண்ணா மட்டும் ஓடாது.. என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்தில் சூர்யா வாங்கிய சொற்ப சம்பளம்… எஸ்கேவிடம் தோற்ற பரிதாபம்…