லியோ படத்துல வந்த பஞ்சாயத்து நமக்கு வரக்கூடாது!. கங்குவா-வில் அலார்ட் ஆன சூர்யா...

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. இந்த படம் சரித்திர கதையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. சூர்யா இதுவரை இப்படி ஒரு படத்தில் நடித்தது இல்லை. அதேபோல், சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம், அண்ணாத்த என கமர்ஷியல் படங்களை இயக்கிய சிவா ஒரு பரிசோதனை முயற்சியாக இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களிலில் நடித்துள்ளார். மகதீரா படத்தை போல ஃபிளாஷ்பேக்கும், ரியலில் நடப்பது எனவும் இரண்டும் கலந்து இப்படத்தில் வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: அந்த கில்மா படத்தில் நடிச்சதே பாருங்க! இது ரஜினியை பத்தி பேசுதா? ரம்பாவை கிழித்தெடுத்த பிரபலம்

மேலும், பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்து வருகிறார். அதோடு, யோகி பாபு, கோவை சரளா, ரெட்டிங் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது.

கங்குவா திரைப்படத்தை பொங்கலுக்கு வெளியிடவே படக்குழு திட்டமிட்டது. ஆனால், படத்தில் இடம் பெற்றிருக்கும் VFX காட்சிகளை முடிக்க நேரம் இல்லை என்பதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. இந்நிலையில், இந்த படத்தில் பல நூறு நடன கலைஞர்கள் ஆடுவது போல் ஒரு காட்சி எடுக்கப்பட்டது.

kanguva

இது படத்தில் சூர்யாவின் அறிமுக பாடலாக வருகிறது. லியோ படத்தில் 2 ஆயிரம் நடன கலைஞர்களை ஆட வைத்தனர். ஆனால், அவர்களுக்கு சரியாக சம்பளம் போய் சேரவில்லை என புகார் எழுந்தது. இது கங்குவா படத்திலும் நடந்துவிடக்கூடாது என நினைத்த சிவா 100 பேரை மாட்டும் ஆடவைத்து கிராபிக்ஸில் 2 ஆயிரம் பேர் ஆடுவது போல காட்டியிருக்கிறாராம்.

கங்குவா படம் வெளிவந்தால் சிறுத்தை சிவாவை ரசிகர்களும், திரையுலகமும் தூக்கி கொண்டாடுவார்கள் என இப்போதே பேசிக்கொள்கிறார்கள். அந்த அளவுக்கு உழைப்பை இப்படத்தில் அவர் செலுத்தியுள்ளார். கங்குவா படம் ஏப்ரல் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Articles

Next Story