Cinema News
Kanguva: கோட், மெய்யழகன் மாதிரி ஆகிடுச்சே…! கங்குவா படத்திற்குத் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல்…!
ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடிக்கும் பிரம்மாண்டமான படம் கங்குவா. படத்திற்கு இசை அமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. இன்னும் இரண்டே நாள்கள் தான் உள்ளது. ஆனால் இன்னும் திரையரங்குகள் ஒதுக்கப்படாமல் உள்ளது.
Also read: Kanguva: ‘கங்குவா’ டிரெய்லரில் கடைசி சீன் நோட் பண்ணீங்களா? தயாரிப்பாளரின் பேராசையால் மாறிய கதை
இதற்கு பெரிய சிக்கல் வந்துள்ளது. அதுவும் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோட் மற்றும் கார்த்தி நடித்த மெய்யழகன் படத்திற்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் பார்ப்போம்.
அமரன் படம் தீபாவளிக்குத் திரைக்கு வந்து சக்கை போடு போட்டு வருகிறது. நல்ல லாபத்தை ஈட்டி வருவதால் பல தியேட்டர்களில் அந்தப் படத்தைத் தூக்க முடியாது என்று சொல்லி விட்டார்களாம். அதனாலும் கங்குவா படத்தை ரிலீஸ் ஆக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இன்னொரு பிரச்சனை என்னன்னா படம் வெளியான 3வது வாரத்தில் தான் திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிகமான பங்குத் தொகை கிடைக்கும். படக்குழுவினரோ அதாவது தயாரிப்பாளர் தரப்பு முதல் வார வசூலில் 75 முதல் 25 சதவீதம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களாம்.
ஆனால் இதை விநியோகஸ்தர்கள் எதிர்த்து வருகிறார்கள். இவ்வளவு பங்கை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லையாம். இந்த சிக்கலாலும் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தியேட்டரை ஒதுக்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
Also read: சொல்லியும் கேட்காம பிடிவாதம் பிடித்த விஷால்!. ஃபிளாப் ஆன அந்த திரைப்படம்!…
இதே பிரச்சனை விஜய் நடித்த கோட் படத்திற்கும் எழுந்தது. அதே போல மெய்யழகன் படத்திற்கும் வந்தது. இரு படங்களுக்கும் இறுதிகட்டத்தில் தான் டிக்கெட் புக்கிங் நடந்தது. அந்த வகையில் இந்தப் படமும் சிக்கியுள்ளது என்றே சொல்லலாம்.
சிங்கம் சிங்கிளா வந்து ஜெயிக்கும் என்றே நவம்பர் 14க்கு ரிலீஸ் தேதியை வேட்டையனுக்காகத் தள்ளி வைத்தார்கள். ஆனால் அமரன் அடிச்சித் தூள் கிளப்புவான்னு அவங்க எதிர்பார்க்கல. இப்போ அதுவே சிக்கலாகி விட்டது. பொறுத்திருந்து பார்ப்போம்… கங்குவா என்ன செய்கிறார் என்று?