ரோலக்ஸ்லாம் கொடுத்தேன்!.. எங்கிட்டேயே மோதுறியேப்பா.. கங்குவா vs இந்தியன் 2 கிளாஷ்.. ரிலீஸ் தேதி இதோ!

தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு பெரிய கிளாஷ் எல்லாம் இல்லாத நிலையில், தமிழ்ப் புத்தாண்டுக்கு பெரும் போட்டி தமிழ் சினிமாவில் வெடிக்கப் போகிறது என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா, திஷா பதானி நடித்து வரும் கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமாக பீரியட் படமாக உருவாகி வருகிறது. அதன் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகியே சூர்யாவை அப்படியொரு தோற்றத்தில் பார்த்த ரசிகர்கள் திரையில் அதுவும் 3டியில் சூர்யாவின் கங்குவா படத்தை பார்க்க காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: இன்னைக்கு 3 மணி நேரத்தில் சோலி முடிஞ்சிடும்!.. விமர்சனத்தை எல்லாம் தடுக்கவே முடியாது.. அமீர் அதிரடி!

பாகுபலி படம் போல பிரம்மாண்ட வெற்றியை கங்குவா செய்யுமா? என்கிற கேள்வியும் சூர்யா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், அந்த படத்தை பற்றிய எந்த தகவல்களும் வெளியாகவில்லை. மேலும், எந்தவொரு ஹைப்பும் இல்லாமல் படம் உருவாகி வருகிறது.

மொத்த படமும் பீரியடாக இருக்காது என்றும் மகதீரா படத்தை போலத்தான் இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், படத்தின் டீசர் வந்தால் தான் ஹைப் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ!.. ஷிவானி சும்மா ஜிவ்வுன்னு இழுக்குறாரே!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் கிளைமேக்ஸில் ரோலக்ஸ் ஆக நடித்த நடிகர் சூர்யாவுக்கு கமல் ரோலக்ஸ் வாட்ச்சையே பரிசாக வழங்கி இருந்தார்.

ஆனால், தற்போது அதெல்லாம் மறந்து விட்டு கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்துக்கு ஆப்பு வைக்கும் அளவுக்கு கங்குவா படத்தை களமிறக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா திரைப்படம் வரும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதியும் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள இந்தியன் 2 திரைப்படம் ஏப்ரல் 12ம் தேதியும் வெளியாக உள்ள நிலையில், மிகப்பெரிய கிளாஷ் வெடிக்கும் என தெரிகிறது. பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் இரு படங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது.

 

Related Articles

Next Story