அந்த தேதில ரிலீஸ் பண்ணி எதுக்கு பல்ப் வாங்கணும்… அக்டோபர் ரேஸில் இருந்து பின்வாங்கிய சூர்யா!..

Published on: August 23, 2024
---Advertisement---

kanguva: நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வந்த நிலையில் தற்போது படக்குழு வேறொரு முடிவில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் இருந்து கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது.

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் கோலிவுட்டில்  திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை. அவரும் தற்போது மும்பையின் தன்னுடைய குடும்பத்துடன் செட்டில் ஆகி இருக்கிறார். தமிழுடன் சேர்த்து தற்போது இந்தியிலும் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஸ்பாட்டில் பாக்கியராஜை பழிவாங்கிய சிவாஜி!.. இப்படியெல்லாம் யோசிப்பாரா?!…

இந்நிலையில் தற்போது சூர்யாவின் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகி இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுபி கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரித்து வருகின்றனர். மதன் கார்த்தி இப்படத்திற்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது.

கங்குவா

சூர்யா, பாபி தியோல், திஷா படானி,  யோகி பாபு, ஜெகபதிபாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். முதலில் இப்படம் 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக மிகப்பெரிய இடைவேளை பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இருக்கிறது. 350 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் அதிக பொருட்ச அளவில் உருவாக்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: கொடிதான் பிரச்னைனு பாத்தா… இப்போ கட்சி பாடல் கூட இந்த பாட்டின் காப்பிதானா?

இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழு ஏற்கனவே அறித்திருந்தது. ஆனால் தற்போது அந்த தேதியில் வெளியிடாமல் மற்றொரு தேதியில் ரிலீஸ் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் அக்டோபர் 10ல் ரிலீஸ் செய்ய இருக்கிறது.

இதே நாளில் கங்குவாவையும் வெளியிட்டால் வசூலில் பெரிய ஏமாற்றம் ஏற்படும் என்பது படக் குழுவின் முடிவாகி இருக்கிறது. மேலும், இப்படத்தின் ஓவர்சீஸ் வசூல் 40 கோடியை தாண்டி இருக்கிறது. எப்போதும் போல் இல்லாமல் சூர்யாவின் படம் இவ்வளவு பெரிய தொகைக்கு விட்டது இதுதான் முதல் முறை. இதனால் படத்தின் வசூலை தவறவிட கூடாது என நினைக்கும் படக்குழு விரைவில் இன்னொரு தேதியை அறிவிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.