சூர்யா உஷார் ஆகணும்!. இல்லனா தங்கலானோட கதிதான் கங்குவாக்கும்!.. அட ஆமாப்பா!..
காதல் கதை, போலீஸ் கதை, ரவுடி கதை, பேய்க் கதை என சினிமா உலகில் எப்போதும் சில கதைகள் தொடர்ந்து எடுக்கப்படும். அப்போது என்ன டிரெண்டிங்கில் இருக்கிறதோ அதை எடுப்பார்கள். இப்போது தமிழ் சினிமா சரித்திர கதைகள் பக்கம் திரும்பி இருக்கிறது. அதற்கு காரணம் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தின் மெகா வெற்றிதான்.
பாகுபலி, பாகுபலி 2 இரண்டு படங்களுமே நல்ல வசூலை பெற்றது. எனவே, மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. இரண்டு பாகங்களாக வெளியானாலும் முதல் பாகம் நல்ல வசூலை பெற்றது. இதையடுத்து சரித்திர நாவல்களை படமாக எடுக்கும் ஆசை சில இயக்குனர்களுக்கு வந்தது.
இதையும் படிங்க: விஜயோட இருக்கு… ஆனால் அஜித்தோட இல்லை.. திரிஷா சொன்ன சீக்ரெட்…
வேள் பாரி என்கிற நாவலை படமாக எடுக்க திட்டமிட்டிருப்பதாக ஷங்கர் கூறியிருந்தார். இது 3 பாகங்களாக வெளியாகும் என அவர் சொல்லி இருக்கிறார். ஒருபக்கம், சில நூறு வருடங்களுக்கு முன் கோலார் தங்க வயலில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வலியை பா.ரஞ்சித் படமாக எடுத்திருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. விக்ரமின் நடிப்பு பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. அவரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். அதேநேரம், படத்தின் பல காட்சிகளிலும் விக்ரம் பேசும் வசனங்கள் ரசிகர்களுக்கு புரியவில்லை என்கிற விமர்சனம் இருக்கிறது.
அந்த காலத்தில் அந்த மக்கள் என்ன மொழி பேசினார்களோ அதை வைத்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இது தங்கலான் படத்திற்கு பெரிய மைனஸாக அமைந்திருக்கிறது. இந்நிலையில்தான், சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.
இந்த படத்திலும் பல காட்சிகளில் பழைய தமிழை பேச வைத்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. எனவே, தங்கலானுக்கு சொன்னது சொன்னது போல ‘புரியவில்லை’ என சொல்லப்படும் ஆபத்து இந்த படத்திற்கும் இருப்பதாக சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ரிலீஸுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் படக்குழு இதை சரி செய்யும் வாய்ப்பும் இருக்கிறது.