‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் வின்னர் ஆனதுக்கு பின்னணியில் உள்ள காரணம்..

Cook with Komali: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி நிகழ்ச்சி. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. சமையல் போட்டியை மையப்படுத்தி அதோடு காமெடியையும் கலந்து மக்கள் ரசிக்கும் படியாக கடந்த நான்கு சீசன்களாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

இப்போது ஐந்தாவது சீசனில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பயணித்து வருகிறது. கடந்த நான்கு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை ரக்சன் தொகுத்து வழங்கி வந்தார். வெங்கட் பட் மற்றும் செப் தாமோதரன் நடுவர்களாக இருந்து நிகழ்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வந்தனர்.

இதையும் படிங்க: கோட் படத்தில் குட்டி விஜய் இந்த பிரபலத்தின் மகனா? விஜய் என்ன கேட்டார் தெரியுமா?

ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஐந்தாவது சீசனில் வெங்கட் பட் விலக மத்தம்பட்டி ரங்கராஜன் செஃப் தாமோதருடன் இணைந்து நடுவர்களாக இருந்து வருகிறார்கள். ரக்ஷனுடன் இணைந்து மணிமேகலை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சினிமா பிரபலங்கள் மற்றும் விஜய் டிவியில் காமெடியில் பிரபலமாக இருக்கும் ஒரு சில நடிகர்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டு மக்கள் ரசிக்கும் படியாக இந்த நிகழ்ச்சியை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டாவது சீசனில் டைட்டில் வின்னராக கனி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படிங்க: குட் பேட் அக்லி படத்திலும் அந்த நடிகை!.. இவர் அஜித்தே விடவே மாட்டார் போல!….

இவர் பிரபல சினிமா இயக்குனரான அகத்தியனின் மகள். அவர் எப்படி வெற்றி பெற்றார் என்பதை அகத்தியன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதுவரை தன் மகளுக்கு சமையல் தெரியும் என்பதே அகத்தியனுக்கு தெரியாதாம்.

ஓரளவு சமைப்பார் என்பது மட்டும்தான் தெரியுமாம். இருந்தாலும் நிகழ்ச்சிக்கு போன பிறகு கனி ஷூட்டிங் தவிர்த்து மற்ற நேரங்களில் பிரபலமாக இருக்கும் பல சமையில் நிபுணர்களுடன் இணைந்து சமையல் கற்றுக் கொள்வாராம். எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்பதற்காக நிறைய சமையல் நிபுணர்களை சந்தித்து சமையல் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு அதை மேடையிலும் நிரூபித்தார். இதற்கெல்லாம் அவருடைய டெடிகேஷன் தான் காரணம் என அகத்தியன் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: வேட்டையன் கதை வேறலெவல்!.. ஆனா ரஜினிக்கு செட் ஆகுமா?!.. ஒரு அலசல்!…

Rohini
Rohini  
Related Articles
Next Story
Share it