இந்த வயசிலும் செம்ம குத்தாட்டம் போடும் கனிகா மற்றும் டிடி அக்கா
ஃபைவ் ஸ்டார் படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இந்த படத்தை மணிரத்தினத்தின் உதவியாளர் இயக்குனர் சுசி கணேசன் இயக்கி உள்ளார். கனிகா கேரளாவை சேர்ந்தவர். அதன்பின் வரலாறு, எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பழசிராஜா உள்ளிட்ட சில மலையாள படங்களில் நடித்துள்ளார். 2008-ம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார்.
சமீபகாலமாகவே இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் நடிகை கனிகா கடுமையாக ஒர்க் அவுட் செய்து புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சற்று கவர்ச்சியான உடைகளை அணிந்தும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளரான டிடிவின் அக்கா ப்ரியாதர்ஷினி தற்போது சீரியில்களில் கவனம் செலுத்தி வருகிறார். விஜய் டிவியில் ஒளிப்பரபாகும் நம்மவீட்டு பொண்ணு தொடரில் கதாநாயகியின் அத்தையாக நடித்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கனிகா மட்டும் ஆட்டம் போடாமல் டிடி அக்கா ப்ரியதா்ஷினி மற்றொரு சீரியல் நடிகை மூன்று பேரும் சேர்ந்து விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் பாடலான ஜாலியோ ஜிம்கான பாடலுக்கு செம்மையாக குத்தாட்டம் போடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வயசிலும் இந்த மூன்றும் இப்படியொரு குத்தாட்டம் போட்டுள்ளதை பார்த்து நெட்டிசன்கள் வாயடைத்து நிற்கின்றனர்.