குட்டி ட்ரவுசர் போட்டு கட்டிலில் பண்ற வேலையா இது.. கனிகா வெளியிட்ட வீடியோ!!

by ராம் சுதன் |
kaniha
X

மதுரையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை கனிகா. கல்லூரி படிப்பை முடித்தபின் இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான 5 ஸ்டார் படத்தின் மூலமும் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இதன்பின் டான்சர், எதிரி, சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராஃப் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தமிழில் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்தவருக்கு அதன்பின் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பின்னர் மலையாளப்படங்களில் கவனம் செலுத்தினார். அதே சமயம் தமிழில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறுசிறு கேரக்டர்களில் நடித்து வந்தார்.

பின்னர் படவாய்ப்புகள் முற்றிலும் இல்லாமல் போகவே இவர் கடந்த 2008ல் ஷ்யாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னும் மலையாளத்தின் பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது குடும்பத்துடன் தனது படத்தை பகிர்ந்து வந்தார்.

தற்போது ஒரு குட்டி ட்ரவுசருடன் கட்டிலில் நின்று டான்ஸ் ஆடும் வீடியோவை இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் இந்த வீடியோவை லைக் செய்து வருகின்றனர். தற்போது இவர் மூன்று தமிழ் படம் மற்றும் இரண்டு மலையாளப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்

Next Story