கொலைவெறி ஆகுது!.. கார்த்தி தாடி வச்சதால கிடச்ச வாய்ப்பு!.. போட்டு பொளக்கும் கஞ்சா கருப்பு..
தேனி மாவட்டத்தை சேர்ந்த கஞ்கா கருப்புவை இயக்குனர் பாலா அவர் இயக்கிய பிதாமகன் திரைப்படத்தில் சில காட்சிகளில் நடிக்க வைத்தார். அதன்பின் அமீர் அவரை ராம் படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் கஞ்சா கருப்பு பேசும் வசனங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்தது. அந்த படத்தில் பல காட்சிகளிலும் கஞ்சா கருப்பு நடித்திருப்பார்.
எனவே, அமீர் மீது அவருக்கு எப்போதும் அன்பும் மரியாதையும் உண்டு. அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்திலும் கஞ்சா கருப்பு வரும் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒன்று. குறிப்பாக அந்த டீக்கடையில் அவரை வைத்து கார்த்தியும், சரவணனும் செய்யும் அலப்பறை ரசிகர்களுக்கு எப்போதும் மறக்காது.
இதையும் படிங்க: என் இயக்கத்தில் ரஜினி நடிக்க வேண்டியது!. மிஸ் ஆனது இதனால்தான்!.. அமீர் சொன்ன அதிர்ச்சி தகவல்!..
சீட்டாடும் காட்சி உட்பட அந்த படத்தின் பல காட்சிகளிலும் கஞ்சா கருப்புவை கார்த்தி ஏமாற்றும் காட்சிகள் ரசிகர்களுக்கு அவ்வளவு பிடித்திருந்தது. தற்போது பருத்திவீரன் விவகாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில், கஞ்சா கருப்புவும் அமீருக்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார். பல ஊடகங்களுக்கும் அவர் பேட்டி கொடுத்து வருகிறார்.
அமீர் அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டு பருத்திவீரன் படத்தை எடுத்தார் என்பது எனக்கு தெரியும். அவரின் பணத்தை கேட்டுதான் வழக்கு தொடர்ந்திருக்கிறார். பல பேருக்கு சம்பளம் கொடுக்கவில்லை. பருத்திவீரன் இல்லையென்றால் இன்னைக்கு கார்த்தியே இல்லை. மௌனம் பேசியதே படம் இல்லையெனில் சூர்யாவும் இல்லை என ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: நான் திருடனா?!.. என் மகனுக்கு என்ன பதில் சொல்றது?!. சிவக்குமாருக்கு அமீர் அனுப்பிய மேசேஜ்!..
இந்நிலையில், வேறு ஒரு ஊடகம் ஒன்றில் பேசிய கஞ்சா கருப்பு ‘பருத்திவீரன் படத்தின் பட்ஜெட் அதிகமானதுக்கு காரணமே கார்த்திதான். நான் சிங்கிள் டேக்ல நடிப்பேன். ஆனால், கார்த்தி 15 டேக் வாங்குவார். நான் அமீர் அண்ணனின் விசுவாசி என்பதால் இப்போதுவரை சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அவரின் படங்களில் எனக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை. அமீர் அண்ணனை ஏமாத்துறாங்க.. எனக்கு கொலைவெறி ஆகுது என பொங்கியுள்ளார் கஞ்சா கருப்பு.
மேலும், ‘அந்த படத்துல சூர்யாவதான் அமீர் நடிக்க வைக்க நினைச்சார். கார்த்தி தாடி வச்சதால அவரை நடிக்க வச்சார். அது எனக்கு மட்டும்தான் தெரியும்’ என கூறியுள்ளார்.