விட்டத புடிக்கனுனு வந்துட்டு மொத்தமா கவுத்துப்புட்டீங்களே மாப்பு?..நடிகையை தகாத வார்த்தைகளால் திட்டிய கஞ்சா கருப்பு!..
தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் நகைச்சுவையில் பின்னி பிடலெடுத்துக் கொண்டிருந்தவர் நடிகர் கஞ்சா கருப்பு. இவரின் நடிப்பில் களவாணி, தர்மதுரை, சண்டக்கோழி போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஏராளமான படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
சிறிது நாள்கள் இவரை வெள்ளித்திரை பக்கமே பார்க்க முடியாமல் இருந்தது. திடீரென பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு மீண்டும் பரீட்சையமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது படங்களில் எதிர்பார்த்த இவரை ஒருசில படங்களில் மட்டுமே காணமுடிந்தது.
இதையும் படிங்க : ரஜினி ஆசைப்பட்ட கமலின் சூப்பர் ஹிட் படம்!..கை நழுவி போனதால் இயக்குனரிடம் சண்டைக்கு நின்ன நம்ம சூப்பர் ஸ்டார்!..
மேலும் சினிமாவிற்காக வீட்டை விற்று காரை விற்று ஒன்றுமில்லாமல் இருக்கும் கஞ்சா கருப்பு ஒரு படத்தை தயாரிக்கும் பணியில் இறங்கியிருக்கிறார். ஓங்காரம் என்ற பெயர் கொண்ட அந்த படத்தில் புதுமுக நடிகர்கள் நடிக்க இன்று அந்த படத்திற்கான ஆடியோ விழா நடைபெற்றது.
அப்போது பேசிய கஞ்சா கருப்பு ஒரு தயாரிப்பாளராக தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இந்த விழாவிற்கு ஒரு லட்சம் கொடுத்தால் தான் வருவேன் என்று அந்த படத்தின் நடிகை கூறினாராம். அதை குறிப்பிட்டு அந்த நடிகையை மு**க ஒரு லட்சம் கொடுத்தால் தான் வருவேன் என்று கூறினாள். எதுக்கு இந்த மு**க இப்படி பண்றாங்கனே தெரியல என்று ஒரு நடிகையை அவ்ளோ பேர் கூடிய மேடையில் படு கேவலமாக பேசிவிட்டு சென்றார்.