Connect with us
kannadasan

Cinema History

குடிகாரன் இப்படியா பாடுவான்?!.. எம்.எஸ்.வியின் வரிகளை திருத்திய கண்ணதாசன்!. அதுல அவரு கிங்கு!..

தமிழ் சினிமாவில் கருத்துமிக்க பல பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். 50.60களில் முன்னணி பாடலாசிரியராக இருந்தவர். காதல், சோகம், தத்துவம், மகிழ்ச்சி, துக்கம், நம்பிக்கை என மனித வாழ்வின் அனைத்து உணர்வுகளையும் பாடலில் பாடியவர். பெரிய பெரிய தத்துவங்களையும், இலக்கியங்களையும் சுலபமான வார்த்தைகள் மூலம் பாடலில் வெளிப்படுத்தியவர்.

அதனால்தான் இப்போது கூட கண்ணதாசனின் பாடல் காற்றில் ஒலித்துகொண்டிருக்கிறது. எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு மரணம் நிகழ்ந்தால் கூட ‘வீடு வரை உறவு… வீதி வரை மனைவி’ பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. கண்ணதாசனின் பாடல்கள் உருவான கதைகளில் பல சுவாரஸ்யங்கள் இருக்கிறது. பல கதைகள் இருக்கிறது.

இதையும் படிங்க: கோபத்தில் பிரிந்த கண்ணதாசன் – சிவாஜி.. பிரிந்த இரு துருவங்களையும் சேர்த்த அந்த அழகான பாடல்…

சிவாஜி, சவுகார் ஜானகி, மனோரமா, சந்திரபாபு, ஜெயலலிதா உள்ளிட்ட பலரும் நடித்து 1972ம் வருடம் வெளியான திரைப்படம் நீதி. இப்படத்தை சி.வி.ராஜேந்திரன் என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்திற்கான ஒரு பாடலை எம்.எஸ்.வி உருவாக்கி கொண்டிருந்தார். குடித்துவிட்டு போதையில் இருக்கும் கதாநாயகன் தன்னை சுற்றி இருப்பவர்கள் பற்றியும் இந்த உலகத்தை பற்றியும் பாட வேண்டும். அதேபோல், கடவுளையும் விமர்சிக்க வேண்டும். இதுதான் சூழ்நிலை.

இதற்கு கண்ணதாசனை தவிர வேறு யார் சிறப்பாக பாடல் எழுதமுடியும் என்பதால் அவரை அழைத்திருந்தனர். ஆனால், அவர் வர நேரமானதால் சில டம்மி வார்த்தைகளை போட்டு எம்.எஸ்.வியே அந்த பாடலை பாடிக்கொண்டிருந்தார். இன்று முதல் குடிக்கமாட்டேன். சத்தியமடி பொண்ணே.. ராத்திரிக்கு தூங்க வேண்டும் குடிச்சிக்கிறேன் கொஞ்சம்’ என அவர் பாடிக்கொண்டிருந்தர்.

இதையும் படிங்க: கோபப்படுத்திய இயக்குனர்!. கடுப்பில் 58 பல்லவிகளை எழுதி கொடுத்த கண்ணதாசன்!.. அட அந்த படமா?!..

அப்போது உள்ளே நுழைந்த கண்ணதாசனுக்கு எம்.எஸ்.வி பாடிய வரிகள் பிடித்து போனது. ‘இதுவே நல்லா இருக்கு மறுபடி பாடு’ என அவரை பாட சொல்லி கேட்டுவிட்டு ‘இதில் கொஞ்சம் மாற்ற வேண்டும். நாளையிலிருந்து குடிக்கமாட்டேன்னுதான் குடிகாரன் எப்பவும் சொல்வான். எனவே ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்.. சத்தியமடி தங்கம்.. ராத்திரிக்கு தூங்கவேணும் ஊத்திக்கிறேன் கொஞ்சம்’’ இதுதான் பல்லவி என்றார். இப்படித்தான் அந்த பாடல் உருவானது.

அதேபோல் அந்த பாடலில் இயக்குனர் கேட்டு கொண்டபடி குடிகாரன் கடவுளை விமரிசிப்பது போலவும் வரிகளை எழுதி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இருபது நிமிட சீனை மூன்றே நிமிட பாடலில் சொன்ன கண்ணதாசன்.. படக்குழுவையே வியப்பில் ஆழ்த்திய கவியரசர்..

google news
Continue Reading

More in Cinema History

To Top