சம்பளத்தை வாங்க கண்ணதாசனும், எம்.எஸ்.வியும் போட்ட நாடகம்!.. அட இது நல்லா இருக்கே!...

சம்பளத்தை வாங்க மெல்லிசை மன்னரும், கவிப்பேரசும் இயக்குனரை தாஜா செய்த சுவாரசிய சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம். சம்பளத்தோடு, பாராட்டு - சன்மானமும் கிடைக்க வைத்து வெற்றி வாகைசூடிய "ஹலோ மிஸ், ஹலோ மிஸ் எங்கே போறீங்க" பாடல் உருவான விதம் பற்றி தெரிந்துகொள்வோம்.

எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "என் கடமை". காவல் அதிகாரி வேடமேற்று கதாநாயனாக எம்.ஜி.ஆர். நடிக்க, படத்தின் ஒரு காட்சியில் சாரோஜாதேவி கோபம் கொண்டு செல்ல, இருவருக்கும் இடையேயான ஊடலை வெளிப்படுத்திய பாடலாக அமைந்ததுதான் இந்த பாடல்.

இதையும் படிங்க: கண்ணதாசனை ஏற்க மறுத்த வாலி!.. முதலமைச்சர் நானா? நீங்களா?!.. எகிறிய எம்.ஜி.ஆர்!..

நடேஷ் பிக்சர்ஸ் உரிமையாளருமான நடேசன் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கதாநாயகன் வீட்டு அறைக்கு கதாநாயகி வருகை தர, இருவரும் தனிமையில் இருப்பதை யாரும் பார்த்தால் என்னவாகும் எனச்சொல்லி சரோஜாதேவியை வீட்டை விட்டு வெளியே போகச்சொல்லுவார் எம்.ஜி.ஆர், இதானால் கோபமடைந்த காதலியின் கோபத்தை தணிக்க காதலன் பாடும் பாடலாக அமைந்தது.

இப்படி சூழ்நிலையை இயக்குனர் நடேசன் சொல்ல கவிஞர் கண்ணதாசன் மறுகணமே பாட்டெழுத, மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இணையும் உடனடியாக மெட்டு போட்டனர். பாடல் உடனே கிடைத்தால் எளிதில் கிடைக்கும் எதுவும் நிலைத்து நிற்காதோ என எண்ணிய இயக்குனர் பாடலாசிரியர், இசையமைப்பாளர்கள் மீது கோபம் கொண்டு அவர்களுக்கான சம்பளத்தை தர மறுத்துவிட்டார்.

இதையும் படிங்க: படம் ஓடாது என்று அன்றே கணித்த எம்ஜிஆர்… நம்பியாரைக் கண்டு கொதித்து எழுந்த ரசிகர்கள்..!

அவரிடம் சம்பளத்தை எப்படி வாங்குவது என யோசித்த கண்ணதாசன் - எம்.எஸ்.வி கூட்டணி அதே வரிகள், அதே மெட்டை வைத்துக்கொண்டு அதை உருவாக்க இரண்டு நாட்கள் ஆனது போல நடித்துள்ளனர். நான் அடிப்பது போலே அடிக்கிறேன், நீ அழுவது போல அழு என இவர்கள் போட்ட திட்டம்தான் இந்த தாமதம்.

தான் நினைத்தது போல் இவர்கள் அவசர, அவசரமாக வேலை செய்யாமல் நேரம் எடுத்துக்கொண்டு பாடலை முடித்துக்கொடுத்தாக நினைத்து திருப்தி அடைந்தாராம் இயக்குனர் நடேசன். கண்ணதாசன், விஸ்வநாதன் ராமமூர்த்தியின் திறமை பற்றி அறியாமல் இயக்குனர் இப்படி இருக்கின்றாரே என வெளியே சொல்லமுடியாமல் சிரித்துகொண்டதாம் படக்குழு.

 

Related Articles

Next Story