சோ சொன்னதை கேட்டு அரசு விருதை வாங்க மறுத்த கண்ணதாசன்!.. காரணம் இதுதான்!..

தமிழ் சினிமாவில் 60களின் காலத்தில் கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர் என வலம் வந்தவர் கவிஞர் கண்ணதாசன். காதல், சோகம், தத்துவம் என எல்லாவற்றையும் தனது பாடல்வரிகளில் கொண்டு வந்தவர். கண்ணதாசன் மரணத்தை எழுதினால் அந்த மரணமே கை தட்டும் என மிகையாக சொல்வார்கள்.

அந்த அளவுக்கு அவரின் வரிகளின் வீரியம் இருக்கும். மரணம் மட்டுமில்லாமல் நம்பிக்கை, விரக்தி, இயலாமை, குடும்ப பிரச்சனை என எல்லாவற்றையுமே எழுதியவர். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பல நூறு பாடல்களை கவிஞர் எழுதியிருக்கிறார். குறிப்பாக 60களில் திரையுலகில் முக்கிய ஆளுமைகளாக இருந்த எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு அதிக பாடல்களை எழுதியவர் இவர்தான்.

இதையும் படிங்க: ஆசைப்பட்ட ஃபாரின் சரக்கு கிடைக்கலயே!.. கோபத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்..

ஒருகட்டத்தில் தயாரிப்பாளராக மாறி சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். அங்குதான் நஷ்டத்தை சந்தித்தார். ஏனெனில் அவர் தயாரிப்பில் வெளிவந்த படங்கள் தோல்வியை சந்தித்தது. ஒருகட்டத்தில் கடனாளி ஆகி சில சொத்துக்களையும் விற்றார். அப்போது அவருக்கு சில உதவிகளை செய்தவர் எம்.ஜி.ஆர்.

துவக்கத்தில் எம்.ஜி.ஆருடன் பயணித்த கண்ணதாசன் அரசியல் காரணமாக அவருக்கு எதிரியாக மாறி பல மேடைகள் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்தார். எனவே, எம்.ஜி.ஆரின் படங்களுக்கு கவிஞர் வாலி பாடல்களை எழுதினார். ஒருகட்டத்தில் அவரே எம்.ஜி.ஆரின் ஆஸ்தான பாடலாசிரியராக மாறினார்.

இதையும் படிங்க: இதுதான் கேப்புல கெடா வெட்றதா?!. சிவாஜி படத்தில் தன்னை பற்றி பாடல்களை எழுதிய கண்ணதாசன்!..

கண்ணதாசனுக்கு எப்போது குழப்பம் வந்தாலும் அவர் உதவி கேட்பது நடிகர் சோ-விடம்தான். இருவரும் நல்ல நண்பர்கள். ஒருமுறை கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது கண்ணதாசனுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை வாங்கலாமா? வேண்டாமா? என கண்ணதாசனுக்கு குழப்பம்.

உடனே சோ-வை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார். கலைமாமணி விருது 15 வருடங்களாக கொடுக்கப்பட்டு வருகிறது. அப்போதெல்லாம் கொடுக்காமல் இப்போது ஏதோ கொடுக்க வேண்டும் என்பதற்காகவே கொடுக்கிறார்கள். அதை வாங்காதீர்கள்’ என சோ சொல்ல கண்ணதாசன் அந்த விருதை நிராகரித்தார்.

 

Related Articles

Next Story