More
Categories: Cinema History Cinema News latest news

உன் இஷ்டத்துக்குலாம் பாட்டு போட முடியாது!.. எம்.எஸ்.வி ஆசையில் மண்ணை போட்ட கண்ணதாசன்…

இளையராஜாவிற்கு முன்பு தமிழ் சினிமாவில் இருந்த பெரும் இசை ஜாம்பவான்களில் முக்கியமானவர் இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதன்.

இளையராஜா அளவிற்கு எம்.எஸ் விக்கும் அப்போது தமிழ் சினிமாவில் பெரும் செல்வாக்கு இருந்தது. சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஜி.ஆரில் துவங்கி அப்போது இருந்த முன்னணி நடிகர்கள் பலரும் தங்களது திரைப்படத்தில் எம்.எஸ்.வி இசை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர்.

Advertising
Advertising

அப்போது பாடல் வரிகள் எழுதுவதில் கண்ணதாசன் பிரபலமானவராக இருந்தார். இருவருமே அவர்களது துறையில் பெரும் கில்லாடிகள் என்பதால் அடிக்கடி அவர்களுக்குள் சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் அதை சில நாட்களுக்கு தான் நீடிக்கும்.

சிவாஜி கணேசனின் படம் ஒன்றுக்கு எம்.எஸ்.வி இசையமைக்கும் போது இதே பிரச்சனை நடந்துள்ளது. அப்போது வந்த பார் மகளே பார் என்கிற திரைப்படத்திற்கு எம்.எஸ்.விதான் இசையமைத்தார்.

எம்.எஸ்.விக்கு வந்த ஆசை:

படத்திற்கு பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார். அந்தப் படத்தில் ஒரு பாடலை மட்டும் பாடல் வரிகளே இல்லாமல் வெறும் இசையிலேயே கொண்டு போக வேண்டும் என்று ஒரு ஆசை எம்.எஸ்.விக்கு இருந்தது.

kannadasan

எனவே அதற்கான இசையையும் எம்.எஸ்.வி அமைத்தார். ஆனால் அதைக் கேட்ட கண்ணதாசன் கண்டிப்பாக இந்த பாடலில் வரிகள் இருக்க வேண்டும் என்று கூறி இதற்காக சிவாஜி மற்றும் படத்தின் இயக்குனர் இருவரிடமும் பேசி அந்த பாடலில் வரிகள் இடம் பெறுவது போல மாற்றிவிட்டார்.

அதற்கு பிறகு அந்த பாடல் நீரோடும் வைகையிலே என்று அந்த படத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தாலும் எம்.எஸ்.வியின் ஆசைதான் கடைசியில் நிறைவேறவில்லை.

இதையும் படிங்க: ஸ்லோ பாய்சன் கொடுத்து பிரபல வில்லன் நடிகர் கொலை முயற்சி.. இவருக்கா இந்த நிலைமை?

Published by
Rajkumar