Connect with us

கொள்கைகளால் முரண்பட்ட கவிஞர் எம்ஜிஆரை புகழ்ந்து தள்ளிய காலத்தால் அழியாத காவிய பாடல்

Cinema History

கொள்கைகளால் முரண்பட்ட கவிஞர் எம்ஜிஆரை புகழ்ந்து தள்ளிய காலத்தால் அழியாத காவிய பாடல்

எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. இந்தப்படத்தை ரசிக்காத தமிழ் ரசிகர்களே இருக்க முடியாது. அவ்ளோ சூப்பர் ஹிட்டான படம். இதில் க்ளைமாக்சுக்கு முன் ஒரு பாடல்.

அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காணப் புறப்படும் ஒரு புரட்சிகரமான வீரன் பாடும் பாடல். அந்தக் காட்சிக்கு எத்தனையோ பேர் பாடல் எழுதியும் எம்.ஜி.ஆருக்கு திருப்தி வரவில்லை.

Kannadasan

அப்போது ஒரு கவிஞர் கண்ணதாசன் ஏற்கெனவே எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவர்தான். அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக எம்.ஜி.ஆரை மேடைகளில் கடுமையாக விமர்சித்து வந்தார்.

ஆனாலும், அந்தக் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம்.ஜி.ஆர். கூறியதில்லை. எம்.ஜி.ஆர். படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று கவிஞரும் சொன்னதில்லை.

மேடைப் பேச்சுக்கள் ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம்.ஜி.ஆர் படங்களின் தயாரிப்பாளர்களும் இயக்குநர் களும் கவிஞரை அணுகத் தயங்கினர். அதனால், எம்.ஜி.ஆரின் சில படங்களில் அவர் பாடல்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MGR, Kannadasan

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் மேலே குறிப் பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பல கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் அந்தக் கவிஞரை விட்டே அந்த பாடலை எழுதச் சொன்னால் என்ன? என்ற யோசனை பிறந்தது.

படக்குழுவினர் கவிஞரிடம் விஷயத்தைச் சொல்ல, அவரும் எழுதிக் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி அந்தப் பாடலை ஓ.கே. செய்தார்.

அந்தப் பாடல்தான் காலத்தால் அழியாத காவிய பாடலாக மலர்ந்தது. ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்…’என்ற பாடல் தான் அது. பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். அவர் கடுமையாக தாக்கிப் பேசுவாரே தவிர, மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம்.ஜி.ஆருக்குத் தெரியும்.

Mattukkaravelan

எம்.ஜி.ஆர். நடித்த வெள்ளிவிழா படமான ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் கூட ஒரு பாடலை எழுதினார் கவியரசர் கண்ணதாசன்.

‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?’ என்ற இனிமையான பாடல் தான் அது. கதாநாயகியைப் பார்த்து எம்.ஜி.ஆர். பாடும் வரிகளில் இப்படி ஒரு வரி வரும்.

‘பள்ளிக் கணக்கு கொஞ்சம் சொல்லிப் பழக்கு, நீ இல்லையென்றால் நான் தொடுப்பேன் காதல் வழக்கு’ என்று வரும். பதிலுக்கு நாயகி, ‘போடுங்கள்.. கூண்டில் ஏற்றுங்கள்.. நான் போதும் என்று சொல்லும் வரை நீதி சொல்லுங்கள்’ என்று பாடுவாள்.

நாயகி பாடும் வரிகளில் எம்.ஜி.ஆருக்கு திருப்தி இல்லை. கண்ணதாசனிடம் சொல்லி அந்த வரிகளை மாற்றச் சொன்னார். உடனே கண்ணதாசன் மாற்றிக் கொடுத்தார். அது தான்…

‘போடுங்கள் கூண்டில் ஏற்றுங்கள், உங்கள் பொன்மனத்தை சாட்சி வைத்து வெற்றி கொள்ளுங்கள்’. அடடா என்னே கவியரசரின் கற்பனை என்று வர்ணிக்கத் தோன்றுகிறது அல்லவா?!

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top