கண்ணதாசன் எப்பேர்பட்ட கவியரசராக திகழ்ந்தவர் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். அப்படிப்பட்ட புகழ்பெற்ற கண்ணதாசனுக்கு அவரது வாழ்வில் மிகப் பெரிய அநியாயம் ஒன்று நடந்திருக்கிறது. அது என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
1976 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், வாணி ஸ்ரீ ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ரோஜாவின் ராஜா”. இத்திரைப்படத்தை கே.விஜயன் என்பவர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கண்ணதாசன் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் எழுதியிருந்தார்.
“ரோஜாவின் ராஜா” திரைப்படம் யூட்யூப் வலைத்தளத்தில் காணக்கிடைக்கிறது. ஆனால் அதில் டைட்டில் கார்டில் பாடல்கள் என்ற டைட்டிலின் கீழ் புரட்சிதாசன் என்ற பெயர் இடம்பெற்றிருக்கிறது. இந்த சர்ச்சை குறித்து பிரபல நடிகரும் கண்ணதாசனின் மகனுமான அண்ணாதுரை கண்ணதாசன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதாவது 1984 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த “தராசு” திரைப்படத்திற்கு பாடல் எழுதியிருந்தவர் புரட்சிதாசன். அந்த திரைப்படத்தின் டைட்டிலை அப்படியே வெட்டி யாரோ கண்ணதாசனுக்கு வேண்டப்படாதவர் “ரோஜாவின் ராஜா” திரைப்படத்தில் இணைத்திருக்கிறார்.
“ரோஜாவின் ராஜா” திரைப்படம் வெளிவந்த சில ஆண்டுகளிலேயே இந்த சர்ச்சை நடந்திருக்கிறது. ஆனால் இந்த டைட்டில் கார்டை மாற்றுவதற்கு எவ்வளவோ முயன்றும் தன்னால் முடியவில்லை என்று அந்த வீடியோவில் அண்ணாதுரை கண்ணதாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: என்ன இருந்தாலும் ஆர்.ஜே.பாலாஜி இப்படி சொல்லியிருக்க கூடாது… பங்கமாய் கலாய்த்த தயாரிப்பாளர்…
Good bad…
நடிகர் கார்த்திக்கை…
Samantha: தென்னிந்திய சினிமாவில்…
ராணுவத்தை மையமாக…
ஏ.ஆர்.ரகுமான் தனது…