அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். அதே நேரம் அவர் மிகவும் மதநல்லிணக்க எண்ணம் கொண்டவர் என்பதும் உண்மை. தனது பாடல் ஒன்றில் இந்த மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதத்தில் வரிகளைப் போட்டுள்ளார். இதுகுறித்து திருச்சி வேலுசாமி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாவ மன்னிப்பு படத்தில் சிவாஜி ஒரு இஸ்லாமிய இளைஞராக நடித்து இருந்தார். எல்லோரும் கொண்டாடுவோம்… அல்லாவின் பேரைச் சொல்லி, நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம்…
பாடலில் என்ன ஸ்பெஷல்னா ஒவ்வொரு வரி முடிகிற போதும் ஓம் ஓம் ஓம்னு தான் முடியும். இந்து மதத்தில் ஓம் என்பது ஒரு மந்திரச்சொல். ஒரு இஸ்லாமிய இளைஞன் அல்லாவைப் பற்றிப் பாடுகிற பாடலில் ஒவ்வொரு வரியிலும் ஓம் ஓம் ஓம்னு எழுதியிருப்பாரு. இதை ஒருவர் சொன்னால் தான் அந்தப் பாடலைக் கேட்கும்போது நம்மால் அதன் இனிமையையும் உணர முடியும்.
கண்ணதாசன் சாதாரண வேடிக்கையாக எழுதும் பாடலில் கூட ஆழமான அர்த்தங்கள் இருக்கும். ஒருமுறை கோவை செழியன் சிவாஜியை வைத்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தார். அப்போது கண்ணதாசனிடம் அவர் ஒரு கோரிக்கை வைத்தார். கவிஞரே… பெரிய பட்ஜெட்ல படம் எடுக்கிறேன். ஹேப்பியா ஒரு பாட்டைப் போடுங்கன்னு சொன்னார். அவ்வளவு தானேன்னு ஆரம்பிக்கும்போதே ஹேப்பி இன்று முதல் ஹேப்பின்னு பாடல் எழுதினார் கவியரசர்.
ஒரு தடவை சும்மா உளறுற மாதிரி ஒரு கவிதையை சொன்னாரு. சொன்ன போது இவரு என்ன பைத்தியமா கவிஞரான்னு நினைச்சேன். எழுதிக்கன்னு சொன்னாரு. தேடினேன் வந்தது. நாடினேன் தந்தது. வாழ வா என்றது. வாசலில் நின்றது. எனக்கு அப்ப அது கவிதை மாதிரி தோணல. என்னடா இப்படி உளருறாறேன்னு சொன்னேன். சும்மா இருடான்னு நண்பன் சொன்னான். அந்த வயதில எனக்கு அது புரியல. அந்தப் படம் வந்ததுக்குப் பிறகு இத்தனை ஆண்டுகள் கழித்தும் கூட அது சாகா வரம் பெற்ற பாடலாக உள்ளது. இதைத் தான் நான் அவரது பக்கத்தில் இருந்து பார்த்தேன்.
இவ்வாறு திருச்சி வேலுசாமி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…