திரையுலகில் காலத்தால் அழிக்க முடியாத அர்த்தமுள்ள பல பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். சோகம், கண்ணீர், தத்துவம், காதல், விரக்தி, நம்பிக்கை என எல்லாவாற்றையும் தனது பாடலில் சொன்னவர். சாமானியர்களால் புரிந்துகொள்ள முடியாத இலக்கியங்களையும் தனது எளிமையான வார்த்தைகள் மூலம் பாடலில் சொல்லியவர்.
பாடலாசிரியாரக இருந்த வரை அவருக்கு நிம்மதியாக இருந்தார். எப்போது சினிமா தயாரிப்பில் இறங்கினாரோ அப்போதே அவருக்கு பிரச்சனை துவங்கியது. படம் தயாரிக்க கடன் பெற்று படம் தோல்வி அடைந்து கடனில் சிக்கினார். அதேபோல், திரையுலகில் சிலருக்கு உதவ நினைத்து அவர்கள் பெற்ற கடனுக்கு ஜாமீன் போட்டார். ஆனால், அவர்கள் கம்பி நீட்டிவிட அந்த கடனையும் இவரே சுமக்க வேண்டிய நிலை வந்தது.
இதையும் படிங்க: ஒரே செகண்டில் உருவான பல்லவி… காலத்தால் அழியாத கண்ணதாசன் வரிகள்.. அட அந்த பாட்டா!…
இந்த சோகம், ஏமாற்றம், நம்பிக்கை துரோகம், கண்ணீர் என எல்லாவற்றையும் தனது பாடலில் இறக்கி வைத்தார் கண்ணதாசன். அப்படி ஒரு சூழலில் அவர் எழுதிய ஒரு பாடலைத்தான் இங்கே பார்க்க போகிறோம். பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி நடித்த பாவ மன்னிப்பு படத்திற்காக ஒரு பாடலை எழுத கண்ணதாசன் சென்றார்.
சந்தோஷம் மற்றும் மனதில் இருக்கும் துக்கம் என இரண்டையுமே வெளியே காட்டி கொள்ள முடியாமல் தவிக்கும் மன நிலையில் இருக்கும் கதாநாயகன் பாடும் பாடல் என சொல்லப்பட்டது. கவிஞரும் பாடல் எழுத தயாரானார். அப்போது அவர் பட்ட கடனுக்காக அவரின் வீட்டை ஜப்தி செய்ய வங்கி அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு வந்துவிட்டனர் என்கிற செய்தி தொலைப்பேசி மூலம் அவருக்கு சொல்லப்பட்டது.
இதையும் படிங்க: நடிகைக்கு மறைமுகமாக சவால் விட்ட பத்மினி!.. பாடல் வரி மூலம் உதவிய கண்ணதாசன்!. அந்த நடிகை அவரா?!..
இதைக்கேட்டு மனமுடைந்து போனாலும் அங்கிருந்தவர்களிடம் அதை காட்டிக்கொள்ளாமல் பாடலை எழுதினார். ‘சிலர் அழுவார்.. சிலர் சிரிப்பார்.. நான் அழுதுகொண்டெ சிரிக்கின்றேன்’ என பல்லவி எழுதினார். அந்த பாடலின் சரணத்தில் அவருக்கு அவரே ஆறுதல் சொல்லும் படி ‘காலம் ஒருநாள் மாறும்.. நம் கவலைகள் யாவும் தீரும்.. வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன்’ என எழுதினார்.
பாடலை எழுதிகொடுத்துவிட்டு பதட்டத்துடன் அங்கிருந்து வெளியேறினார். எல்லோருக்கும் இதற்கான காரணம் புரியவில்லை. இதில், எம்.எஸ்.வி மட்டும் காரை எடுத்துக்கொண்டு கண்ணதாசன் வீட்டிற்கு சென்று பார்த்தபோதுதான் அவருக்கு உண்மை புரிந்தது. ‘என்ன கவிஞரே. இப்படி ஒரு சூழ்நிலையிலா பாட்டு எழுத வந்தீங்க?’.. என வருத்தபட அதற்கு கண்ணதாசன் சிரித்துக்கொண்டே ‘விசு..கூட்டத்தில் இருக்கும்போது சிரிக்க வேண்டும். தனிமையில் மட்டுமே அழ வேண்டும்.. கூட்டத்தில் அழுதால் நடிப்பு என சொல்வார்கள்.. தனியாக சிரித்தால் பைத்தியம் என சொல்வார்கள்’ என தத்துவம் சொன்னாராம்.
கவிஞர் சொன்ன இந்த வார்த்தைகளில்தான் எவ்வளவு வலிகளும்.. அர்த்தமும்!..
இதையும் படிங்க: சொன்னது ஒண்ணு..செய்றது ஒண்ணு..எம்.எஸ்.வி மீது கடுப்பான கண்ணதாசன்..இப்படியா பழிவாங்குவாரு!..