காலத்தை வென்ற கவிஞர்களில் கவிஞர் கண்ணதாசனும் ஒருவர். பழங்கால படங்கள் அனைத்திலும் இவரின் பாடல் வரிகளை காண முடியும். அந்த காலத்தில் மிகவும் பிஸியாக இருந்த பாடலாசிரியர்களில் இவரும் ஒருவர். இவர் சிறந்த வசனகர்த்தாவும் கூட.
இவர் பல திரைப்படங்களுக்கு வசனங்களையும் எழுதியுள்ளார். மேலும் இவர் தனது சொந்த புத்தகங்கள் பலவற்றையும் எழுதியுள்ளார். இவரின் வரிகளில் வாழ்க்கைக்கான பல அர்த்தங்கள் இருக்கும். இதனாலேயே இவரை கவியரசர் என அழைத்தனர்.
இதையும் வாசிங்க:சொன்னது ஒண்ணு..செய்றது ஒண்ணு..எம்.எஸ்.வி மீது கடுப்பான கண்ணதாசன்..இப்படியா பழிவாங்குவாரு!..
இவர் கவிஞரை தாண்டி பல படங்களில் நடித்தும் உள்ளார். தமிழில் சிங்காரி என்ற திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராய் அறிமுகமானார். பின் திருவிளையாடல், மூன்றாம் பிறை போன்ற திரைப்படங்களில் பாடல்களை எழுதியும் உள்ளார்.
ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில் 1968ஆம் ஆண்டு வெளியான படம்தான் தில்லானா மோகானாம்பாள். இப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பத்மினி, நம்பியார் போன்ற பல முக்கிய கதாபாத்திரங்களும் நடித்துள்ளனர். இப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் இன்று வரையில் பேசப்படுகிறது.
இதையும் வாசிங்க:ஒரு கோடி சம்பளமாக வாங்கிய ஒரே படம்… தயாரிப்பாளரையே தப்பாக நினைத்த சிவாஜி கணேசன்!
இப்படத்தில் வரும் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்ற பாடல் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இப்பாடல் உருவாகும் பொழுது கவிஞர் பல வரிகளை எழுதி கொடுத்துள்ளார். ஆனால் எந்த பல்லவிக்கும் இயக்குனர் சம்மதம் கூறவில்லையாம். இன்னும் வேறு மாதிரி பல்லவி எழுதி தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது இயக்குனர் கண்ணதாசனிடம் கதையை கூறியுள்ளார். அப்போது கண்ணதாசன் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்று பாடலை எழுதியுள்ளார். பின் அப்படத்தில் சிவாஜியின் பெயர் ஷண்முகம். பாடலில் சிவாஜியின் பெயரை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு கவிஞர் மாதவா, வேலவா, மாயவா, ஷண்முகா என பாடல் எழுதியுள்ளார். இப்படம் உருவான விதமும் பாடல்கள் உருவான விதமும் காலத்தை கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
இதையும் வாசிங்க:நடிகைக்கு மறைமுகமாக சவால் விட்ட பத்மினி!.. பாடல் வரி மூலம் உதவிய கண்ணதாசன்!. அந்த நடிகை அவரா?!..
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…