Cinema History
ஒருத்தனும் பணம் தரல!.. விரக்தியில் கண்ணதாசன் எழுதிய பாடல்!.. அட அது செம ஹிட்டு!…
கருப்பு வெள்ளை காலம் திரைப்படங்களில் பல பாடல்களை பாடியவர் கவிஞர் கண்ணதாசன். காதல், சோகம், தத்துவம், கண்ணீர், விரக்தி என எந்த சூழ்நிலை என்றாலும் அதை அப்படியே தனது பாடல் வரிகளில் கொண்டு வந்தவர். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் பல அற்புதமான பாடல்களை எழுதியவர்.
வெறும் பாடல்களை மட்டும் எழுதிக்கொண்டிருந்த போது அவரின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. எப்போது படங்களை தயாரிக்க துவங்கினாரோ அப்போதுதான் அவருக்கு ஏழரை துவங்கியது. சில படங்களினால் நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆனார். சில சொத்துக்களை விற்றார். நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்தார்.
இந்த சூழ்நிலையில்தான் சிவாஜி நடித்த பழனி திரைப்படத்தில் ஒரு பாடல் எழுத வேண்டியிருந்தது. எம்.எஸ்.விஸ்வநாதன் டியூனை வாசித்து காட்டினார். வழக்கமாக எம்.எஸ்.வி. டியூனை வாசித்து முடித்தவுடன் கண்ணதாசனிடமிருந்து வார்த்தைகள் அருவி போல கொட்டும். ஆனால், அன்று கவிஞர் அமைதியாக அமர்ந்திருந்தார்.
என்னாச்சு கவிஞரே? என எம்.எஸ்.வி கேட்க ‘உன்னிடம் எவ்வளவு பணம் கையில இருக்கு?’ என கவிஞர் கேட்க, எம்.எஸ்.வியோ ‘என்ன கவிஞரே என்னை பற்றி தெரியாதா?. நான் எல்லா பணத்தையும் என் அம்மாவிடம் கொடுத்துவிடுவேன். நான் எதையும் வைத்துக்கொள்ள மாட்டேன்’ என சொல்ல, அங்கிருந்து சிலருக்கு தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பணம் கேட்டாராம் கண்ணதாசன். ஆனால், யாரும் தரவில்லை. விரக்தியில் ஒரு சிரிப்பை சிரித்துவிட்டு ‘இப்ப அந்த ட்யூனை வாசி’ என்றாராம். எம்.எஸ்.வி வாசித்து காட்ட கவிஞர் எழுதிய பாடல்தான் ‘அண்ணன் என்னடா? தம்பி என்னடா அவசரமான உலகத்திலே?’ பாடல்.
டி.எம்.சவுந்தரராஜன் பாடிய இந்த பாடல் அப்போது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கவிஞரின் வரிகள்:
அண்ணன் என்னடா!
தம்பி என்னடா!
அவசரமான உலகத்திலே!
ஆசை கொள்வதில்
அர்த்தம் என்னடா!
காசில்லாதவன் குடும்பத்திலே!
தாயும் பிள்ளையும் ஆன போதிலும்
வாயும் வயிறும் வேறடா
சந்தை கூட்டத்தில் வந்த மந்தை
சொந்தம் என்பது ஏதடா!
வாழும் நாளிலே!
கூட்டம் கூட்டமாய்
வந்து சேர்கிறார் பாரடா!
கை வறண்ட வீட்டிலே!
உடைந்த பானையை
மதித்து வந்தவர் யாரடா!
மதித்து வந்தவர் யாரடா
பணத்தின் மீதுதான்
பக்தி என்றபின்
பந்த பாசங்கள் ஏனடா!