கண்ணதாசன், வாலி அதிர்ஷ்டம் பண்ணவங்க!.. வைரமுத்துவின் பேச்சுக்கு வாலி ரியாக்ஷன் இதுதான்!..
தமிழ் சினிமாவில் தமிழ் கவிதைகள் படைப்பதில் தலை சிறந்த கவிஞர்களாக வலம் வந்தவர்கள் கண்ணதாசனும் வாலியும். கண்ணதாசன் கவிதைகள் மட்டுமில்லாது புதினம், சிறுகதை, நாவல், என அனைத்து துறைகளிலும் தமிழால் தன் படைப்புகள் மூலம் சிறந்து விளங்கினார்.
வாலியை வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர். இவருக்கு வயதானாலும் இவரின் கவிதைக்கு வயதாகவில்லை என்று அவரின் பெருமையை கூறி வந்தனர். மேலும் காலத்திற்கு ஏற்ப கவிதைகளை படைப்பதில் தலைசிறந்தவர் வாலி.இருவரும் தமிழ் சினிமாவின் சிறப்பு அங்கமாக திகழ்ந்து வந்தனர்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, என முன்னனி நடிகர்களின் படங்களுக்கு இவரின் படைப்புகளில் வந்த பாடல்கள் கூடுதல் பலமாக அமைந்தன. இந்த நிலையில் இவர்களை பற்றி வைரமுத்து கூறிய ஒரு வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது இப்ப உள்ள கவிஞர்களுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்பது வைரமுத்துவின் கருத்தாக இருக்கிறது.
இதனை வலியுறுத்தியே அந்த வீடியோவில் கண்ணதாசன் , வாலி வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழவில்லையே என்பது தான் என் வருத்தம். அவர்கள் அந்த காலத்தில் வாழ்ந்தது அவர்களின் அதிர்ஷ்டம் , ஏனெனில் அவர்கள் காலத்தில் பாட்டுக்கு என்று முக்கியத்துவம் கொடுத்தனர் என்று கூறியிருக்கின்றார்.
இதை ஆமோதித்து பேசிய கவிஞர் வாலி ‘வைரமுத்து சொல்வது சரிதான், இப்ப உள்ள கவிஞர்களை பாராட்டினால் கையில் பிடிக்க முடியாது என்று கூறினார். மேலும் அவர் கூறும் போது வியட் நாம் வீடு நாடகத்தில் நடித்து முடித்த சிவாஜியை அனைவரும் பாராட்டினர்.
அவர் பேசிய வசனத்தை கேட்டு அனைவரும் ஆரவாரம் செய்தனர். அதன் பின் சிவாஜி பார்க்க வந்த ரசிகர்களிடம் நான் பேசிய வசனத்திற்கு சொந்தக்காரர் சுந்தரம் தான், அவருக்கு தான் இந்த பாராட்டு கிடைக்க வேண்டும்’ என்று கூறினாராம். இதை குறிப்பிட்டு பேசிய வாலி அந்தக் காலத்தில் எப்படி எல்லாம் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்,
இதையும் படிங்க : மிஷ்கினுக்கு பாரபட்சம் காட்டிய இளையராஜா?… வெற்றிமாறனுக்கு மட்டும் இவ்வளவு இடம் கொடுத்திருக்கிறாரா!…
ஆனால் இப்ப பாட்டை எழுதி கொடுத்தாலும் பல்லவி நான் போட்டது, அனுபல்லவி என்னுடையது என்று யார் யாரோ சொல்கின்றனர், ஏன் இந்த பாடலாசிரியரை சொன்னதும் நான் தான் என்று பெருமை பேசுகின்றனர். இப்படி இருக்கும் போது கவிஞர்களுக்குள் உள்ள முக்கியத்துவம் காணாமல் போய்விடுகின்றது என்று வாலி கூறியிருந்தார்.